தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-20325

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.

அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், இதில் வரும் ஸகீப் கிளையை சேர்ந்த கண் தெரியாத மனிதர் பற்றி நல்லவர் என்று கூறப்பட்டது என்றும், இவர் ஸுஹைர் பின் உஸ்மான் என்றில்லாவிட்டால் இவரின் பெயர் தனக்கு தெரியாது என்றும் கூறினார்.

(முஸ்னது அஹ்மத்: 20325)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ الثَّقَفِيِّ، عَنْ رَجُلٍ أَعْوَرَ مِنْ ثَقِيفٍ، قَالَ قَتَادَةُ: وَكَانَ يُقَالُ لَهُ: مَعْرُوفٌ إِنْ لَمْ يَكُنْ اسْمُهُ زُهَيْرَ بْنَ عُثْمَانَ، فَلَا أَدْرِي مَا اسْمُهُ؟، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي مَعْرُوفٌ، وَالْيَوْمَ الثَّالِثَ سُمْعَةٌ وَرِيَاءٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-20325.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-19850.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
  • மேலும் இதில் வரும் ஸுஹைர் பின் உஸ்மான் அவர்கள், நபித்தோழரா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.