தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3745

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

திருமண விருந்தை எத்தனை நாட்கள் வரை கொடுப்பது விரும்பத்தக்கது?

  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமும், முகஸ்துதியுமாகும்.

அறிவிப்பவர்: ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

இதன் அறிவிப்பாளார்களில் ஒருவரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களை (ஒரு திருமணத்தின்) முதல் நாள் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் நாளும் அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் நாள் அழைக்கப்பட்டபோது அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள், இவர்கள் விளம்பரத்திற்காகவும், முகஸ்துதியுடனும் விருந்தளிக்கின்றனர் என்று கூறினார்கள் என எனக்கு ஒரு மனிதர் கூறினார்.

(அபூதாவூத்: 3745)

بَابٌ فِي كَمْ تُسْتَحَبُّ الْوَلِيمَةُ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُثْمَانَ الثَّقَفِيِّ، عَنْ – رَجُلٍ أَعْوَرَ مِنْ ثَقِيفٍ كَانَ يُقَالُ لَهُ مَعْرُوفًا أَيْ يُثْنَى عَلَيْهِ خَيْرًا إِنْ لَمْ يَكُنِ اسْمُهُ – زُهَيْرُ بْنُ عُثْمَانَ فَلَا أَدْرِي مَا اسْمُهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«الْوَلِيمَةُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِيَ مَعْرُوفٌ، وَالْيَوْمَ الثَّالِثَ سُمْعَةٌ وَرِيَاءٌ»

قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنِي رَجُلٌ أَنَّ سَعِيدَ بْنَ الْمُسَيِّبِ دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّانِيَ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ، وَقَالَ: «أَهْلُ سُمْعَةٍ وَرِيَاءٍ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-3745.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3256.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-25027-அப்துல்லாஹ் பின் உஸ்மான் அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/526)

  • மேலும் இதில் வரும் ஸுஹைர் பின் உஸ்மான் அவர்களிடமிருந்து அப்துல்லாஹ் பின் உஸ்மான் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஸுஹைர் பின் உஸ்மான் நபித்தோழரா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கிடையில் கருத்துவேறுபாடு உள்ளது. புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் நபித்தோழர் என்பதற்கு சரியான ஆதாரமில்லை என்று கூறியுள்ளார். இப்னுஸ் ஸகன் அவர்கள், இவர் நபித்தோழர் என்று அறியப்படவில்லை. அம்ர் பின் அலீ அவர்கள் தான் இவரை நபித்தோழர் என்று கூறியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
  • திர்மிதீ, அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    இப்னு குஸைமா,பிறப்பு ஹிஜ்ரி 223
    இறப்பு ஹிஜ்ரி 311
    வயது: 88
    இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவரை நபித்தோழர் என்று குறிப்பிட்டுள்ளனர்.

(நூல்: அல்காஷிஃப்-2/424, அல்இஸாபா-4/48, தஹ்தீபுத் தஹ்தீப்-1/638…)

1 . இந்தக் கருத்தில் ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • அப்துல்லாஹ் பின் உஸ்மான் —> ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-20324 , 20325 , 23152 , அபூதாவூத்-3745 , குப்ரா நஸாயீ-6561 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-3021 , அல்முஃஜமுல் கபீர்-5306 , குப்ரா பைஹகீ-14509 ,

  • கதாதா —> ஹஸன் —> அப்துல்லாஹ் பின் உஸ்மான் —> ஸுஹைர் பின் உஸ்மான் (ரலி)

பார்க்க: தாரிமீ-2109 ,

  • கதாதா —> ஒரு மனிதர் —> ஸயீத் பின் முஸய்யிப்

பார்க்க: தாரிமீ-2109 , குப்ரா பைஹகீ-14510 ,

  • கதாதா —> ஸயீத் பின் முஸய்யிப்

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20569 , அபூதாவூத்-3746 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-1915 .

3. அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: குப்ரா பைஹகீ-14512 .

4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8967 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-1097 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.