தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Kubra-Bayhaqi-14512

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பதும் கடமையாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது விளம்பரமாகும்.

யார் விளம்பரத்திற்காகவும், பிறருக்கு காட்டுவதற்காகவும் செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவரின் மற்றொரு அறிவிப்பில் “இரண்டு நாட்கள் விருந்து கொடுப்பது நபிவழி” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் “பிறருக்கு காட்டுவதற்காக” என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

14512-2. நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களை, திருமணம் செய்த பின் (திருமண விருந்திற்காக) ஒரு தோல் விரிப்பை கொண்டு வரக் கூறினார்கள்; அதைக் கொண்டு வந்து விரிக்கப்பட்டபோது அதில் பேரீத்தம்பழங்களையும், (கோதுமை மாவினாலும், பார்லி மாவினாலும் செய்யப்பட்ட) ஸவீக் என்ற உணவையும் வைத்து மக்களை விருந்துக்கு அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “திருமண விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது நல்லதாகும்; மூன்றாவது நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(பைஹகீ-குப்ரா: 14512)

حَدَّثَنَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيُّ إِمْلَاءً، ثنا جَدِّي أَبُو عَمْرٍو، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدُوسِ بْنِ كَامِلٍ، ثنا عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، ح وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ، أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ، أنبأ عَلِيُّ بْنُ الْعَبَّاسِ، ثنا مُحَمَّدُ بْنُ مُوسَى الْحَرَشِيُّ قَالَا: ثنا زِيَادُ بْنُ عَبْدِ اللهِ الْبَكَّائِيُّ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ:

طَعَامُ أَوَّلَ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِيَ مِثْلَهُ ” وَفِي رِوَايَةِ السُّلَمِيِّ: ” طَعَامُ يَوْمٍ حَقٌّ، وَطَعَامُ يَوْمَيْنِ سُنَّةٌ، وَطَعَامُ الْيَوْمِ الثَّالِثِ سُمْعَةٌ وَرِئَاءٌ , وَمَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللهُ بِهِ “

وَلَمْ يَذْكُرِ السُّلَمِيُّ قَوْلَهُ: رِئَاءٌ

وَرَوَاهُ بَكْرُ بْنُ خُنَيْسٍ عَنِ الْأَعْمَشِ عَنْ أَبِي سُفْيَانَ عَنْ أَنَسٍ رَضِيَ اللهُ عَنْهُ

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا تَزَوَّجَ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا ” ” أَمَرَ بِالنِّطَعِ فَبُسِطَ ثُمَّ أَلْقَى عَلَيْهِ تَمْرًا وَسَوِيقًا فَدَعَا النَّاسَ فَأَكَلُوا ” ” , وَقَالَ: ” ” الْوَلِيمَةُ فِي أَوَّلِ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي مَعْرُوفٌ، وَالثَّالِثِ رِئَاءٌ وَسُمْعَةٌ


Kubra-Bayhaqi-Tamil-.
Kubra-Bayhaqi-TamilMisc-.
Kubra-Bayhaqi-Shamila-14512.
Kubra-Bayhaqi-Alamiah-.
Kubra-Bayhaqi-JawamiulKalim-13437,
13438.




  • இதன் முதல் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-37660-முஹம்மது பின் ஹுஸைன் பின் மூஸா-அபூஅப்துர்ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் பற்றி சிலர் பாரட்டி இருந்தாலும் இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார். முஹம்மது பின் யூஸுஃப் அல்கத்தான் அவர்கள், இவர் ஸூஃபிய்யாக்களுக்காக ஹதீஸை இட்டுக்கட்டுபவர் என்று கூறியதாக கதீப் பக்தாதீ கூறியுள்ளார்…

(நூல்: லிஸானுல் மீஸான்-7/92)

  • மேலும் இந்த செய்தியை ஸியாத் பின் அப்துல்லாஹ் தனித்து அறிவிக்கிறார் என்று தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இமாம் கூறியதை குறிப்பிட்டு விட்டு, இவரை ஆதாரமாக ஏற்கலாமா? கூடாதா? என்பதில் கருத்துவேறுபாடு உள்ளது என்றும், இவர் அதாஉ பின் ஸாயிப் அவர்களிடமிருந்து செவியேற்றது அதாஉ மூளை குழம்பிய பின்பே என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: அத்தல்கீஸுல் ஹபீர்-1560)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

  • இதன் இரண்டாவது அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9406-பக்ர் பின் குனைஸ் பற்றி அதிகமான அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் விமர்சித்துள்ளனர்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் விசயத்தில் இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    வரம்பு மீறி (பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என) விமர்சித்துள்ளார் என்றும், இவர் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/242, தக்ரீபுத் தஹ்தீப்-1/175)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: திர்மிதீ-1097 , அபூதாவூத்-3745 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.