வலீமா விருந்தை முதல்நாள் கொடுப்பது கடமையாகும்; இரண்டாவது நாள் கொடுப்பது சிறப்பானதாகும் (அல்லது-உபரியானதாகும்); மூன்றாவது நாள் கொடுப்பது முகஸ்துதியும், விளம்பரமும் ஆகும்.
யார் விளம்பரத்திற்காக செய்கிறாரோ (அவர் உள்நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான் என்று இப்னு மஸ்வூது (ரலி) கூறினார்.
அறிவிப்பவர்: அபூஅப்துர்ரஹ்மான்-அப்துல்லாஹ் பின் ஹபீப் (ரஹ்)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 8967)حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ الْعَزِيزِ، ثنا أَبُو نُعَيْمٍ، ثنا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ السُّلَمِيِّ، عَنْ عَبْدِ اللهِ، قَالَ:
«الْوَلِيمَةُ أَوَّلُ يَوْمٍ حَقٌّ، وَالثَّانِي فَضْلٌ، وَالثَّالِثُ رِيَاءٌ وَسُمْعَةٌ، وَمَنْ يُسَمِّعْ يُسَمِّعِ اللهُ بِهِ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-8967.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-8878.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-28479-அதாஉ பின் ஸாயிப் பலமானவர் என்றாலும் கடைசி காலத்தில் கூஃபாவிலிருந்து பஸராவிற்கு சென்ற பின் மூளை குழம்பியவர் ஆவார். இதனடிப்படையில் இவரிடமிருந்து ஆரம்பத்தில் கேட்டவர்களான ஷுஃபா, ஸுஃப்யான், ஹம்மாத் பின் ஸலமா, ஹம்மாத் பின் ஸைத் போன்றோரும், இன்னும் சிலரும் அறிவிக்கும் செய்திகளை அறிஞர்கள் சரியானது என்று கூறியுள்ளனர். அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அஸலில் பஸராவாசி என்றாலும் வாழந்தது, மரணித்தது கூஃபா என்பதால் இதன் அறிவிப்பாளர்தொடர் சரியாக இருக்கவும் வாய்ப்புள்ளது…
4 . இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8967 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-3745 .
சமீப விமர்சனங்கள்