அபூதர்ரே! நீர் மாதத்தில் மூன்று நாட்கள் நோன்பு வைப்பதாக இருந்தால், பிறை 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு வைத்துக்கொள்! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அபூகதாதா (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), குர்ரா பின் இயாஸ் அல்முஸனீ (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), அபூஅக்ரப் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), ஆயிஷா (ரலி), கதாதா பின் மில்ஹான் (ரலி), உஸ்மான் பின் அபுல்ஆஸ் (ரலி), ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பவர் காலம் முழுவதும் நோன்பு நோற்றவர் போன்றவராவார்” என்ற கருத்திலும் சில ஹதீஸ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
(திர்மிதி: 761)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ: أَنْبَأَنَا شُعْبَةُ، عَنْ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ يَحْيَى بْنَ سَامٍ، يُحَدِّثُ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ أَبَا ذَرٍّ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«يَا أَبَا ذَرٍّ، إِذَا صُمْتَ مِنَ الشَّهْرِ ثَلَاثَةَ أَيَّامٍ فَصُمْ ثَلَاثَ عَشْرَةَ، وَأَرْبَعَ عَشْرَةَ، وَخَمْسَ عَشْرَةَ»
وَفِي البَابِ عَنْ أَبِي قَتَادَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَقُرَّةَ بْنِ إِيَاسٍ المُزَنِيِّ، وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، وَأَبِي عَقْرَبٍ، وَابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ، وَقَتَادَةَ بْنِ مِلْحَانَ، وَعُثْمَانَ بْنِ أَبِي العَاصِ، وَجَرِيرٍ.: ” حَدِيثُ أَبِي ذَرٍّ حَدِيثٌ حَسَنٌ، وَقَدْ رُوِيَ فِي بَعْضِ الحَدِيثِ: أَنَّ مَنْ صَامَ ثَلَاثَةَ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ كَانَ كَمَنْ صَامَ الدَّهْرَ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-761.
Tirmidhi-Alamiah-692.
Tirmidhi-JawamiulKalim-691.
ஆய்வின் சுருக்கம்:
சில ஹதீஸ்களில், உபரியான நோன்புகளில் மாதத்தில் 3 நாட்கள் நோன்பு வைப்பது என்று பொதுவாக வந்துள்ளது.
வேறு சில ஹதீஸ்களில் அந்த 3 நாட்கள் பிறை 13, 14, 15 என்ற அய்யாமுல் பீழ்-வெள்ளை நாட்கள் என்று வந்துள்ளது…
…
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . திர்மிதீ இமாம்
2 . மஹ்மூத் பின் ஃகைலான்
3 . அபூதாவூத்-தயாலிஸீ
4 . ஷுஅபா
5 . அஃமஷ்
6 . யஹ்யா பின் ஸாம்
7 . மூஸா பின் தல்ஹா
8 . அபூதர் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48272-யஹ்யா பின் ஸாம் என்பவர் பற்றி, அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் இவர் சுமாரானவர் என்ற தகவல் தனக்கு கிடைத்தது என்று மட்டுமே கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/356)…
- திர்மிதீ அவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரை ஹஸன் என்றே குறிப்பிட்டுள்ளார்.
- இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள், இவரை மக்பூல் என்ற தரத்தில் தான் கூறியுள்ளார். - இந்த அறிவிப்பாளர் தொடர் ஹஸன் தரம் என அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
ஷுஐப் போன்றோர் கூறியுள்ளனர்.
…
1 . இந்தக் கருத்தில் அபூதர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-21334 , 21335 , 21350 , 21437 , 21537 , திர்மிதீ-761 , நஸாயீ-2422 , 2423 , 2424 , 2425 , 2426 , 2427 , 4311 ,
2 . ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: நஸாயீ-2420 .
கதாதா பின் மில்ஹான் (ரலி)
அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
இப்னு மஸ்ஊத் பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 33
(ரலி)
குர்ரா பின் இயாஸ் அல்முஸனீ (ரலி)
அம்மார் பின் யாஸிர் (ரலி)
அனஸ் (ரலி)
மின்ஹால் பின் மில்ஹான் (ரலி)
அபூஅய்யூப் (ரலி)
அப்துர்ரஹ்மான் பின் ஸப்ரா (ரலி)
உபை பின் கஅப் (ரலி)
…
மாதத்தில் 3 நாட்கள் என பொதுவாக வந்துள்ள ஹதீஸ்கள்:
பார்க்க: திர்மிதீ-762 .
சமீப விமர்சனங்கள்