தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bazzar-261

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முஸ்லிம்களின் காரியத்திற்கு பொறுப்பேற்று அல்லாஹ் அவருக்கு அதன் மூலம் நல்லதை நாடினால் அவருக்காக ஒரு நல்ல ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(bazzar-261: 261)

[تابع عمرو , عن عائشة رضي الله عنها]

حدثنا الفضل بن سهل، قالَ: حَدَّثَنا منصور بن أبي مزاحم، قالَ: حَدَّثَنا أبو سعيد المؤدب , عن يحيى بن سعيد , عن عمرة , عن عائشة رضي الله عنها قالت: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

من ولي من أمر المسلمين شيئا فأراد به خيرا جعل له وزيرا صالحا إن نسي ذكره وإن ذكر أعانه.


Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-261.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-1503.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-42853-அபூஸயீத் அல்முஅத்திப்-முஹம்மது பின் முஸ்லிம் பற்றி பல அறிஞர்கள் பலமானவர் எனக் கூறியுள்ளனர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இருவரும், இவர் இடம்பெரும் ஒரு செய்தியை துணை ஆதாரமாக கூறியுள்ளனர். (புகாரி-5113முஸ்லிம்-213)
  • என்றாலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள் ஃபீஹி நளருன்-அவரை பற்றி விமர்சனம் உள்ளது என்று கூறியுள்ளார் என மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார். அவரின் நூலை சீராய்வு செய்த இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்களும் அவ்வாறே கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-5608, தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.3/700)

  • (புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களின் فيه نظر – ஃபீஹி நளருன் என்ற இந்த வார்த்தை கடுமையான விமர்சனம் என்று தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் போன்ற பலர் கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்ற சிலர் இது சாதாரண விமர்சனம் என்றும், இவ்வாறு கூறப்பட்டவர்கள் நடுத்தரமானவர்கள் என்றும் கூறுகின்றனர். இதை பற்றி ஆய்வு செய்த ஒரு அறிஞர் தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    இமாம் அவர்களின் கூற்றையே சரியானது என முடிவு செய்கிறார்.).
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/896 )

  • ஆனால் புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களின் நூற்களிலும், மூல நூல் அல்கமாலிலும் புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அபூஸயீத்-முஹம்மது பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    பற்றி فيه نظر  என்று கூறியதாக குறிப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த செய்தி சரியானதாகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-2932 .

2 comments on Bazzar-261

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

    நீங்கள் பல்வேறு வகைப்பட்ட ஹதீஸ்களை தமிழில் பதிவு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    உங்களுடைய பெயர் என்ன ? நீங்கள் மதரஸாவின் அடிப்படையில் இந்த விஷயத்தை பதிவு செய்கிறீர்களா? அல்லது தனி ஒருவராக இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறீர்களா ? என்பதை நான் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றேன். சகோதரரே…

    பதில் தாருங்கள்!

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த ஹதீஸ் மென்பொருள், ஹதீஸ்களைத் தொகுக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களின் கூட்டுமுயற்சியால் நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சில அறிஞர்கள் ஹதீஸ்களை பதிவு செய்து வருகிறார்கள். ஹதீஸ்கலை விதிகளின் படியே ஹதீஸ்கள் பதிவு செய்யப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக கருத்துக்களையும், விமர்சனங்களையும் எதிர்ப்பார்க்கிறோம். மேலும் பார்க்க: இந்த சாஃப்ட்வேர் பற்றி…

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.