தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2932

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

(தலைவர், தனக்கு) ஆலோசகரை ஏற்படுத்திக் கொள்வது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ், ஒரு தலைவருக்கு நல்லதை நாடினால் அவருக்காக ஒரு உண்மையான ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தாலும் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டுவார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிவார்.

அல்லாஹ், ஒரு தலைவருக்கு நல்லது அல்லாததை நாடினால் அவருக்காக ஒரு தீய ஆலோசகரை ஏற்படுத்துவான். அவர் மறந்தால் அந்த ஆலோசகர் அவருக்கு நினைவூட்டமாட்டார். அவர் (மறக்காமல்) நினைத்துவிட்டால் அந்தப் பணியை செய்வதில் அந்த ஆலோசகர் அவருக்கு உதவிபுரிய மாட்டார்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(அபூதாவூத்: 2932)

بَابٌ فِي اتِّخَاذِ الْوَزِيرِ

حَدَّثَنَا مُوسَى بْنُ عَامِرٍ الْمُرِّيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ، حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا أَرَادَ اللَّهُ بِالْأَمِيرِ خَيْرًا جَعَلَ لَهُ وَزِيرَ صِدْقٍ، إِنْ نَسِيَ ذَكَّرَهُ، وَإِنْ ذَكَرَ أَعَانَهُ،

وَإِذَا أَرَادَ اللَّهُ بِهِ غَيْرَ ذَلِكَ جَعَلَ لَهُ وَزِيرَ سُوءٍ، إِنْ نَسِيَ لَمْ يُذَكِّرْهُ، وَإِنْ ذَكَرَ لَمْ يُعِنْهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2932.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




  • இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் பஸ்ஸார், முஃஜமுல் அவ்ஸதில் வரும் செய்திகள் சரியானவை என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறியுள்ளார். என்றாலும் முஃஜமுல் அவ்ஸத்-4240 எண்ணில் வரும் அப்பாஸ் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அறியப்படாதவர் ஆவார்.
  • பார்க்க: முஸ்னத் பஸ்ஸார்-261 .

இந்தக் கருத்தில் ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-24414 , அபூதாவூத்-2932 , முஸ்னத் பஸ்ஸார்-261 , நஸாயீ-4204 , குப்ரா நஸாயீ-7779 , 8699 , முஸ்னத் அபீ யஃலா-4439 , இப்னு ஹிப்பான்-4494 , அல்முஃஜமுல் அவ்ஸத்-4240 , குப்ரா பைஹகீ-20319 , 20320 , 20321 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.