தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-7765

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

இடதுபுறத்து வானவர் பாவம் செய்யும் முஸ்லிமுக்காக ஆறு மணிநேரம் பாவத்தை எழுதாமல் எழுதுகோலை உயர்த்தி வைத்திருப்பார்; அந்தப் பாவியான அடியான் கவலைப்பட்டு, அல்லாஹ்விடம் தன் பாவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டால் அந்தப் பாவத்தை அவ்வானவர் எழுதுவதில்லை. அவர் பாவமன்னிப்பு கேட்கவில்லையென்றால் ஒரு தீமை எழுதப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 7765)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْوَهَّابِ بْنِ نَجْدَةَ الْحَوْطِيُّ، ثنا أَبِي ح، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ زِيَادِ بْنِ زَكَرِيَّا الْأَيَادِيُّ، ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ نَجْدَةَ الْحَوْطِيُّ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ إِسْحَاقَ بْنُ إِبْرَاهِيمَ بْنِ زَبْرِيقٍ الْحِمْصِيُّ، ثنا عَمِّي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ ح، وَحَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، ثنا إِبْرَاهِيمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْعَلَاءِ الْحِمْصِيُّ، قَالُوا: ثنا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، عَنْ عَاصِمِ بْنِ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ عُرْوَةَ بْنِ رُوَيْمٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِي أُمَامَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«إِنَّ صَاحِبَ الشِّمَالِ لِيَرْفَعُ الْقَلَمَ سِتَّ سَاعَاتٍ عَنِ الْعَبْدِ الْمُسْلِمِ الْمُخْطِئِ أَوِ الْمُسِيءِ، فَإِنْ نَدِمَ وَاسْتَغْفَرَ اللهَ مِنْهَا أَلْقَاهَا، وَإِلَّا كُتِبَتْ وَاحِدَةً»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-7765.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:


  • இதன் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில், ராவீ-35390-முஹம்மது பின் இப்ராஹீமும், ராவீ-4391-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸியாதும்
    இடம் பெரும் இரண்டு அறிவிப்பாளர்தொடர்கள் பலவீனமானவை. முஹம்மது பின் இப்ராஹீம் பலவீனமானவர். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஸியாத் அறியப்படாதவர்.
  • மேலும் இவை அனைத்திலும் வரும் ராவீ-20397-ஆஸிம் பின் ரஜா பற்றி, இப்னு அப்துல் பர் பலமானவர் என்றும், இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஸுர்ஆ போன்றோர் சுமாரானவர் எனவும் கூறியுள்ளனர். குதைபா பின் ஸயீத் இவரை விமர்சித்துள்ளார் என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/252)

  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார்….
  • இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சிறிது தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-3075)

இந்த செய்தியை பற்றி, ஹைஸமீ அவர்கள், இதில் வரும் ஒரு அறிவிப்பாளரை (ஆஸிம் பின் ரஜா) அறிஞர்கள் பலமானவர் எனக் கூறியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

(நூல்: மஜ்மஉஸ் ஸவாயித்-10/207)

அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதில் வரும் ஆஸிம், காஸிம் இருவரைப் பற்றி விமர்சனம் இருந்தாலும் அந்த விமர்சனம் இவர்களை ஹஸன் தரத்தை விட குறைத்து விடாது எனக் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-1209)


என்றாலும் காஸிம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-28360-உர்வா பின் ருவைம் அவர்கள் அதிகம் முர்ஸலாக அறிவிப்பவர் என்ற விமர்சனம் உள்ளது. மிஸ்ஸீ இமாம் அவர்கள் இவர் காஸிம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் சரியானதல்ல என்று கூறியுள்ளார்…

மேலும் இந்தச் செய்தி வேறுசில செய்திகளுக்கு முரணாக உள்ளது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் நினைவாற்றல் குறைவானவர்கள் வேறு ஒரு செய்தியை தவறாக விளங்கி அறிவித்துள்ளனர் என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

(அந்தச் செய்தியை பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-10815)

எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்.


1 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • உர்வா பின் ருவைம் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க:


  • ஜஃபர் பின் ஸுபைர் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அஸ்ஸுஹ்த்-ஹன்னாத் பின் ஸரீ-,


  • ஸவ்ர் பின் யஸீத் —> காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அபூஉமாமா (ரலி)

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-,


கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.