உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? இன்னின்ன காரியங்களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார்களே! (நீங்கள் கேட்ட) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். முஸ்லிம் சகோதரனின் மானத்தில் சிறிதளவேனும் பங்கம் விளைவித்திருந்தாலும் அவனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள்.
மேலும் (அந்த) கிராமவாசிகள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மருத்துவம் செய்யாமலிருந்தால் எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டனர். அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் வைத்திருக்கவில்லை. முதுமை என்ற ஒரு நோயைத் தவிர! என்று நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு பதிலளித்தார்கள்.
மேலும் (அந்த) கிராமவாசிகள், அல்லாஹ்வின் தூதரே! ஒரு அடியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாக்கியங்களில் சிறந்தது எது? எனக் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நற்குணம் என்று அவர்களுக்கு பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி)
(இப்னுமாஜா: 3436)
بَابُ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً، إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَهِشَامُ بْنُ عَمَّارٍ، قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ:
شَهِدْتُ الْأَعْرَابَ يَسْأَلُونَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَعَلَيْنَا حَرَجٌ فِي كَذَا؟ أَعَلَيْنَا حَرَجٌ فِي كَذَا؟ فَقَالَ لَهُمْ: «عِبَادَ اللَّهِ، وَضَعَ اللَّهُ الْحَرَجَ، إِلَّا مَنِ اقْتَرَضَ، مِنْ عِرْضِ أَخِيهِ شَيْئًا، فَذَاكَ الَّذِي حَرِجَ»
فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ: هَلْ عَلَيْنَا جُنَاحٌ أَنْ لَا نَتَدَاوَى؟ قَالَ: «تَدَاوَوْا عِبَادَ اللَّهِ، فَإِنَّ اللَّهَ، سُبْحَانَهُ، لَمْ يَضَعْ دَاءً، إِلَّا وَضَعَ مَعَهُ شِفَاءً، إِلَّا الْهَرَمَ» ،
قَالُوا: يَا رَسُولَ اللَّهِ مَا خَيْرُ مَا أُعْطِيَ الْعَبْدُ قَالَ: «خُلُقٌ حَسَنٌ»
Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3427.
Ibn-Majah-Shamila-3436.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3435.
சமீப விமர்சனங்கள்