தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-3855

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அத்தியாயம்: 27

மருத்துவம்.

பாடம்:

மருத்துவம் செய்துக் கொள்ளுதல்.

உஸாமா பின் ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு தடவை நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் தலைகளில் பறவைகள் அமர்ந்திருப்பது போல் அமைதியாக இருந்தார்கள். நான் அவர்களுக்கு ஸலாம் கூறினேன். பிறகு அமர்ந்துக் கொண்டேன்.

அப்போது பல பக்கங்களிலிருந்து கிராமவாசிகள் வந்தார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் நோய்களுக்கு மருத்துவம் செய்து கொள்ளலாமா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மருத்துவம் செய்து கொள்ளுங்கள்! ஏனெனில் எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் வைத்திருக்கவில்லை. ஆனால், ஒரு நோய் மட்டும் விதிவிலக்கு; அது முதுமை (முதுமை என்ற ஒரு நோயைத் தவிர. இதற்கு மருந்தில்லை) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸாமா பின் ஷரீக் (ரலி)

(அபூதாவூத்: 3855)

27 – كِتَاب الطِّبِّ
بَابٌ فِي الرَّجُلِ يَتَدَاوَى

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ:

أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابَهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ، فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ، فَجَاءَ الْأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، أَنَتَدَاوَى؟ فَقَالَ: «تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلَّا وَضَعَ لَهُ دَوَاءً، غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-3357.
Abu-Dawood-Shamila-3855.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 

 


 

 


1 . இந்தக் கருத்தில் உஸாமா பின் ஷரீக் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-18454, 18455, 18456, அல்அதபுல் முஃப்ரத்-291, இப்னு மாஜா-3436, அபூதாவூத்-3855திர்மிதீ-2038, …


 


2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-5678.


3 . ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்லிம்-4432.


….


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: புகாரி-5687,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.