தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-4297

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

(எதிரி) சமுதாயங்கள் இஸ்லாத்திற்கு எதிராக ஒருவர் மற்றவரை அழைப்பது.

உணவு உண்பவர்கள், (ஒருவர் மற்றொருவரை) உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து உங்களுக்கெதிராகச் செயல்பட அழைத்துக்கொள்வார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் நீங்கள் வெள்ளத்தில் அடிபட்டுச் செல்லும் சருகுகளைப் போன்று இருப்பீர்கள். இன்னும், உங்களைப் பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் உள்ளங்களிலிருந்து அல்லாஹ் கழற்றி எடுத்துவிட்டு, உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ எனும் சிந்தனையைப் போட்டு விடுவான்’ எனக் கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என ஒரு மனிதர் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், மரணத்தை வெறுப்பதும், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)

(அபூதாவூத்: 4297)

بَابٌ فِي تَدَاعِي الْأُمَمِ عَلَى الْإِسْلَامِ

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا ابْنُ جَابِرٍ، حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا»، فَقَالَ قَائِلٌ: وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ؟ قَالَ: «بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ، وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمُ الْمَهَابَةَ مِنْكُمْ، وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ»، فَقَالَ قَائِلٌ: يَا رَسُولَ اللَّهِ، وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الدُّنْيَا، وَكَرَاهِيَةُ الْمَوْتِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4288.
Abu-Dawood-Shamila-4297.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-3747.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19513-அபூ அப்துஸ்ஸலாம்- பற்றி, இப்னு ஹிப்பான்,பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இப்னு ஷாஹின் இருவரும் பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளனர்.
  • என்றாலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் அபூ அப்துஸ்ஸலாம் என்ற பெயரில் இருவர் உள்ளனர். ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூ அப்துஸ்ஸலாம் என்பவர் வேறு.  மக்ஹூலிடமிருந்து அறிவிக்கும் அபூஅப்துஸ்ஸலாம் என்ற ஸாலிஹ் பின் ருஸ்தும் என்பவர் வேறு என்று புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 
  • இதில் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அபூ அப்துஸ்ஸலாம் அறியப்படாதவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/193)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

  • என்றாலும் இந்தக் கருத்து ஸவ்பான் (ரலி) வழியாக அஹ்மத்-22397 என்ற எண்ணிலும், அல்உகூபாத்-இப்னு அபித்துன்யா, ஹில்யதுல் அவ்லியா போன்ற வேறு சில நூல்களிலும் முபாரக் பின் ஃபளாலா —> மர்ஸூக் —> அம்ர் பின் மர்ஸத் (அபூஅஸ்மா) —> ஸவ்பான் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பதால் இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் சரியானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-958).

மேலும் பார்க்க: அஹ்மத்-22397 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.