தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-22397

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா? என்று நாங்கள் கேட்டோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அன்றைய தினம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டிருக்கும்! உங்களுடைய உள்ளங்களில் (அல்லாஹ்) “வஹ்னை’ ஏற்படுத்தி இருப்பான்” என்று பதிலளித்தார்கள். நாங்கள் “அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று கேட்டோம். அதற்கவர்கள், “உலகத்தை நேசிப்பது; மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 22397)

حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا الْمُبَارَكُ، حَدَّثَنَا مَرْزُوقٌ أَبُو عَبْدِ اللَّهِ الْحِمْصِيُّ، أَخْبَرَنَا أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الْأُمَمُ مِنْ كُلِّ أُفُقٍ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ عَلَى قَصْعَتِهَا» . قَالَ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَمِنْ قِلَّةٍ بِنَا يَوْمَئِذٍ؟ قَالَ: «أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنْ تَكُونُونَ غُثَاءً كَغُثَاءِ السَّيْلِ، تُنْتَزَعُ الْمَهَابَةُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ، وَيَجْعَلُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ» . قَالَ: قُلْنَا: وَمَا الْوَهْنُ؟ قَالَ: «حُبُّ الْحَيَاةِ وَكَرَاهِيَةُ الْمَوْتِ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-21363.
Musnad-Ahmad-Shamila-22397.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-21809.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-35039-முபாரக் பின் ஃபளாலா பற்றி ஹுஷைம் அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாக இப்னுல்மதீனீ அவர்கள் அறிவித்துள்ளார். இவ்வாறே அஃப்பான் அவர்களும் இவரை பலமானவர் என்று கூறியுள்ளார்.
  • என்றாலும் சிலர் இவர் தவறிழைப்பவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் தத்லீஸ் செய்பவர் என்றும் விமர்சித்துள்ளனர்.
  • அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ பிறப்பு ஹிஜ்ரி 133
    இறப்பு ஹிஜ்ரி 198
    வயது: 65
    அஹ்மத் இமாம் அவர்களின் ஆசிரியர்களில் ஒருவர்; அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
    அவர்கள், இவர் ஹத்தஸனல் ஹஸன்-ஹஸன் எங்களுக்கு அறிவித்தார் என்று கூறும் செய்தியை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் தத்லீஸ் செய்பவர்; என்றாலும் இவர் ஹத்தஸனா என்று அறிவித்தால் அந்த செய்தி பலமானது என்று கூறியுள்ளார். 
  • தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள், இவர் சிறிது பலவீனமானவர்; அதிகம் தவறிழைப்பவர். எனவே இவர் போன்று வேறு யாரும் அறிவித்துள்ளார்களா? என்று பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/338, தஹ்தீபுத் தஹ்தீப்-4/18)

  • சிலர் இவர் விசயத்தில் அபூஸுர்ஆ அவர்களின் விளக்கத்தின்படியே முடிவு செய்கின்றனர். இவர் தத்லீஸ் (தத்லீஸ் தஸ்வியஹ்) செய்பவர் என்பதால் இவரின் செய்தியில் இவர் தனது ஆசிரியரிடமும், இவரின் ஆசிரியரின் ஆசிரியருக்குமிடையில் நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இருந்தால் அது சரியானது என்றும் சில ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த சட்டத்தின்படியே இவர் இடம்பெறும் சில செய்திகளை சரியானது என்று கூறியுள்ளார். நேரடியாக கேட்டதாக வார்த்தை அமைப்பு இல்லாவிட்டால் பலவீனமானது என்று கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸஹீஹா-958, அள்ளயீஃபா-1030)

1 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • முபாரக் பின் ஃபளாலா —> மர்ஸூக் —> அம்ர் பின் மர்ஸத் (அபூஅஸ்மா) —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அஹ்மத்-22397 , அல்முஃஜமுல் கபீர்-1452 ,

  • அபுல்அஷ்ஹப் (ஜஃபர் பின் ஹய்யான்) —> அம்ர் பின் உபைத் —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-1085 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-37247 ,

  • இப்னு ஜாபிர் —> அபூஅப்துஸ்ஸலாம் —> ஸவ்பான் (ரலி)

பார்க்க: அபூதாவூத்-4297 .

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8713 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.