தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-8713

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸவ்பானே! நீங்கள் பசியோடு இருக்கும்போது ஒருவருக்கொருவர் உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து (உங்களுக்கெதிராக மற்றவர்களை) அழைக்கும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்குமோ! என்று கூறினார்கள். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். என்றாலும் உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ போடப்பட்டிருக்கும் என்று கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என்றுக் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், போரை வெறுப்பதும் தான் அது என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 8713)

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الْمَدَائِنِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ بْنُ حَبِيبٍ الْأَزْدِيُّ، عَنْ أَبِيهِ حَبِيبِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ شُبَيْلِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ:

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِثَوْبَانَ: «كَيْفَ أَنْتَ يَا ثَوْبَانُ، إِذْ تَدَاعَتْ عَلَيْكُمُ الْأُمَمُ كَتَدَاعِيكُمْ عَلَى قَصْعَةِ الطَّعَامِ تُصِيبُونَ مِنْهُ؟» قَالَ ثَوْبَانُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أَمِنْ قِلَّةٍ بِنَا؟ قَالَ: «لَا، بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنْ يُلْقَى فِي قُلُوبِكُمُ الْوَهَنُ» قَالُوا: وَمَا الْوَهَنُ؟ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «حُبُّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتُكُمُ الْقِتَالَ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-8713.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-8511.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22819-அப்துஸ்ஸமத் பின் ஹபீப் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள்-لا بأس به -பரவாயில்லை என்று கூறியிருந்தாலும் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்களின் வழக்கில் இந்தச் சொல் பலமானவர் என்ற கருத்தாகும்.
  • என்றாலும் இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளார் என்பதால் புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    போன்றோர் இவரை சிறிது பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவர் கைவிடப்பட்டவர் அல்ல. இவரின் ஹதீஸ்களை எழுதிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-1853, அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/51, அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-7/32, தஹ்தீபுத் தஹ்தீப்-2/579)

  • உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    (அபூஸுர்ஆ..?) போன்றோரும் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள் இவர் அறிவிக்கும் ஒரு செய்தியின் விசயத்தில் இவர் மட்டுமே இந்த செய்தியை அறிவிக்கிறார். இவரைப் போன்று யாரும் அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
  • பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    அவர்கள், புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். (ஆனால் அதற்கான அறிவிப்பாளர்தொடரைக் கூறவில்லை)

(நூல்: அள்ளுஅஃபாஉல் கபீர்-3/83, குப்ரா பைஹகீ-8169)

  • மேலும் ராவீ-11204-ஹபீப் பின் அப்துல்லாஹ் (அப்துஸ்ஸமத் அவர்களின் தந்தை) யாரென அறியப்படாதவர் என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/352)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-8713 , அல்முஃஜமுல் அவ்ஸத்-7215 ,

மேலும் பார்க்க: அஹ்மத்-22397 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.