“ஒரு கூட்டம் தங்களது உணவுத் தட்டின் பக்கம் அழைப்பது போல், பிற சமுதாயங்கள், உங்களைக் கொன்றிட (ஒருவர் மற்றொருவரை) அழைத்துக் கொள்வார்கள்” என்று ஸவ்பான் (ரலி) கூறினார்கள். அப்போது அவர்களிடம் “அன்றைய தினம் (முஸ்லிம்கள்) எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்பார்களா? என்றுக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “இல்லை. எனினும் அன்றைய தினம் நீங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி இருப்பீர்கள். நீங்கள் உலகத்தை நேசித்து, மரணத்தை வெறுப்பவர்களாக இருந்ததால் உங்களுடைய உள்ளங்களில் வஹ்ன் ஏற்பட்டிருக்கும்; உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழற்றப்பட்டிருக்கும்! என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் பின் உபைத்
(tayalisi-1085: 1085)حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَشْهَبِ، عَنْ عُمَرَ بْنِ عُبَيْدٍ التَّمِيمِيِّ الْعَبْشَمِيِّ، عَنْ ثَوْبَانَ مَوْلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الْأُمَمُ كَمَا تَدَاعَى الْقَوْمُ إِلَى قَصْعَتِهِمْ» قَالَ: قِيلَ: مِنْ قِلَّةٍ؟ قَالَ: «لَا وَلَكِنَّهُ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ يُجْعَلُ الْوَهَنُ فِي قُلُوبِكُمْ، وَيُنْزَعُ الرُّعْبُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ لِحُبِّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتِكُمُ الْمَوْتَ»
قَالَ يُونُسُ: وَرُوِيَ هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ فَضَالَةَ عَنْ مَرْزُوقٍ أَبِي عَبْدِ اللَّهِ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
Tayalisi-Tamil-.
Tayalisi-TamilMisc-.
Tayalisi-Shamila-1085.
Tayalisi-Alamiah-.
Tayalisi-JawamiulKalim-1076.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32414-அம்ர் பின் உபைத் அல்அப்ஷமீ என்பவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை. மேற்கண்ட செய்தியில் உமர் பின் உபைத் என்றிருப்பது தவறாகும்.
- புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
போன்றோர் இவர் ஸவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து மேற்கண்ட செய்தியை அறிவித்துள்ளார் என்ற தகவலை மட்டுமே கூறியுள்ளனர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் மட்டுமே இவரை நம்பகமானவரின் பட்டியலில் கூறியுள்ளார்.
(நூல்: தாரீகுல் கபீர்-2610 , அல்ஜர்ஹு வத்தஃதீல்-6/247, அஸ்ஸிகாத்-5/179)
மேலும் பார்க்க: அஹ்மத்-22397 .
சமீப விமர்சனங்கள்