நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, தான் செவியேற்றதைப் போன்றே மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! செவியேற்பவரை விட அறிவிக்கப்படுபவர் (இந்த இறைச் செய்தியை) நன்கு புரிந்து கொள்பவராயிருக்கலாம்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
(திர்மிதி: 2657)حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:
«نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا شَيْئًا فَبَلَّغَهُ كَمَا سَمِعَ، فَرُبَّ مُبَلِّغٍ أَوْعَى مِنْ سَامِعٍ»
«هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَقَدْ رَوَاهُ عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-2657.
Tirmidhi-Shamila-2657.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-21975-அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரஹ்) அவர்கள், தனது தந்தை இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் ஹதீஸை கேட்கவில்லை என்று ஷுஅபா,பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
ஆகியோர் கூறியுள்ளனர்.
(நூல்: தாரீகுல் அவ்ஸத்-1/526, தாரீகு இப்னு மயீன்-1716, நஸாயீ-1404)
- இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
இறப்பு ஹிஜ்ரி 234
வயது: 73
அவர்கள், இவர் தனது தந்தையிடமிருந்து ஒன்றிரண்டு ஹதீஸை மட்டுமே கேட்டுள்ளார். (அவை உடும்பு பற்றிய செய்தி, வலீத் என்ற ஆட்சியாளர் தொழுகையைத் தாமதப்படுத்தியதாக வரும் செய்தி) என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/526)
இந்த செய்தி அதில் அடங்காது என்பதால் இது முர்ஸலான அறிவிப்பாளர்தொடராகும்.
- இவர் தத்லீஸ் செய்பவர் என்று சிலர் கூறியுள்ளனர். என்றாலும் சில அறிஞர்கள் இவர் தனது தந்தையிடமோ அல்லது தந்தையின் மாணவர்களிடமோ இருந்து அறிவித்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதால் இவரின் செய்திகள் சரியானவை என்றும் கூறுகின்றனர்…
- இந்த செய்தி வேறு சில சரியான அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.
பார்க்க: புகாரி-67 , திர்மிதீ-2656 ,
3 . இந்தக் கருத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-4157 , இப்னு மாஜா-232 , திர்மிதீ-2657 , 2658 , …
- இப்ராஹீம் அந்நகயீ —> அல்அஸ்வத் (ரஹ்) —> இப்னு மஸ்வூத் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-5179 ,
மேலும் பார்க்க: புகாரி-67 .
சமீப விமர்சனங்கள்