தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-235

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நண்பகல் நேரத்தில் ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், மர்வான் பின் ஹகம் அவர்களிடமிருந்து வெளியே வந்தார். அப்போது நான், ‘இந்த நேரத்தில் ஸைத் (ரலி) அவர்கள் மர்வான் அவர்களிடமிருந்து வெளியே வந்திருக்கிறார் என்றால், நிச்சயமாக அவர் ஏதோவொன்றைப் பற்றி கேட்டிருக்க வேண்டும் என்று நான் எண்ணினேன். உடனே நான் அவரை அணுகி விசாரித்தேன். அதற்கு அவர், ‘ஆம், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட சில ஹதீஸைப் பற்றி மர்வான் என்னிடம் கேட்டார்’ என்று பதிலளித்தார்.

அந்த ஹதீஸ்கள் இவைதான்:

நம்மிடமிருந்து ஒரு செய்தியைச் செவியேற்று, அதை நினைவிலிருத்தி அதைப் பிறருக்கு எடுத்துரைக்கும் மனிதருக்கு அல்லாஹ் செழிப்பான வாழ்வை வழங்குவானாக!. ஏனெனில் (என்னிடமிருந்து) மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர், தம்மை விட அதிக விளக்கமுடைவர்களிடம் அதைச் சேர்த்து வைக்கக்கூடும். மார்க்க அறிவை சுமந்துள்ள எத்தனையோ பேர் மார்க்க சட்ட அறிஞர் அல்லர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மூன்று விஷயங்களில் ஒரு முஸ்லிமின் இதயம் உறுதியாக இருந்தாலே தவிர, அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் “அவை என்ன?” என்று கேட்க, எந்தச் செயலையும் அல்லாஹ்வுக்காக உளத்தூய்மையுடன் செய்வது, ஆட்சியாளர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்குவது, ஜமாஅத்துடன் (சமுதாயத்துடன்) இணைந்து இருப்பது. ஏனெனில் அவர்களின் பிரார்த்தனை அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் சூழ்ந்து கொள்ளும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

எவருடைய எண்ணம் மறுமை பற்றியதாக இருக்குமோ, அல்லாஹ் அவருடைய உள்ளத்தில் நிறைவை ஏற்படுத்துவான், அவருடைய காரியங்களை ஒன்று திரட்டுவான், மேலும் இந்த உலகம் தாழ்வாக அவரை வந்தடையும். எவருடைய எண்ணம் இந்த உலகத்தைப் பற்றியதாக இருக்குமோ, அல்லாஹ் அவருடைய காரியங்களைச் சிதறடிப்பான். அவருடைய வறுமையை அவருடைய கண்களுக்கு முன்னால் வைப்பான். மேலும் அவருக்கு விதிக்கப்பட்டதைத் தவிர இந்த உலகத்திலிருந்து எதுவும் அவரை வந்தடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும், நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘ஸலாத்துல் வுஸ்தா’ (நடுத் தொழுகை) பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், அது “ளுஹ்ருடைய தொழுகை” என்று பதிலளித்தார்கள்.

(ஸுனன் தாரிமீ: 235)

أَخْبَرَنَا عِصْمَةُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا حَرَمِيُّ بْنُ عُمَارَةَ، عَنْ شُعْبَةَ، عَنْ عُمَرَ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبَانَ بْنِ عُثْمَانَ، عَنْ أَبِيهِ، قَالَ:

خَرَجَ زَيْدُ بْنُ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، مِنْ عِنْدِ مَرْوَانَ بْنِ الْحَكَمِ، بِنِصْفِ النَّهَارِ، قَالَ: فَقُلْتُ: مَا خَرَجَ هَذِهِ السَّاعَةَ مِنْ عِنْدِ مَرْوَانَ إِلَّا وَقَدْ سَأَلَهُ عَنْ شَيْءٍ، فَأَتَيْتُهُ، فَسَأَلْتُهُ، قَالَ: نَعَمْ، سَأَلَنِي عَنْ حَدِيثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا، فَحَفِظَهُ فَأَدَّاهُ إِلَى مَنْ هُوَ أَحْفَظُ مِنْهُ، فَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ، وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ»

«لَا يَعْتَقِدُ قَلْبُ مُسْلِمٍ عَلَى ثَلَاثِ خِصَالٍ، إِلَّا دَخَلَ الْجَنَّةَ». قَالَ: قُلْتُ: مَا هُنَّ؟ قَالَ: «إِخْلَاصُ الْعَمَلِ، وَالنَّصِيحَةُ لِوُلَاةِ الْأَمْرِ، وَلُزُومُ الْجَمَاعَةِ، فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مَنْ وَرَاءَهُمْ»

«وَمَنْ كَانَتِ الْآخِرَةُ نِيَّتَهُ، جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ، وَجَمَعَ لَهُ شَمْلَهُ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانِتِ الدُّنْيَا نِيَّتَهُ، فَرَّقَ اللَّهُ عَلَيْهِ شَمْلَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ»

قَالَ: وَسَأَلْتُهُ عَنْ صَلَاةِ الْوُسْطَى، قَالَ «هِيَ الظُّهْرُ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-235.
Darimi-Alamiah-231.
Darimi-JawamiulKalim-231.




மேலும் பார்க்க: திர்மிதீ-2656 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.