தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Hibban-822

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

வீட்டை விட்டு வெளியேறும் போது என்ன கூறினால் நேர்வழியும், பாதுகாப்பும் கிடைக்கும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “இதுவே உனக்கு போதும்! நீ பொறுப்பேற்கப்பட்டாய்!நேர்வழிகாட்டப்பட்டாய்! பாதுகாக்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும். மேலும் அந்த ஷைத்தானிடம் மற்றொரு ஷைத்தான், பொறுப்பேற்கப்பட்ட, நேர்வழிகாட்டப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மனிதரின் மீது உனக்கு எப்படி ஆதிக்கம் இருக்கும்? என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

(இப்னு ஹிப்பான்: 822)

ذِكْرُ الشَّيْءِ الَّذِي يُهْدَى الْقَائِلُ بِهِ وَيُكْفَى وَيُوقَى إِذَا، قَالَهُ عِنْدَ الْخُرُوجِ مِنْ مَنْزِلِهِ

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْذِرِ بْنِ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا يُوسُفُ بْنُ سَعِيدِ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ، فَقَالَ: «بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، فَيُقَالُ لَهُ: حَسْبُكَ قَدْ كُفِيتَ وَهُدِيتَ وَوُقِيتَ؛ فَيَلْقَى الشَّيْطَانُ شَيْطَانًا آخَرَ فَيَقُولُ لَهُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ كُفِيَ وَهُدِيَ وَوُقِيَ»


Ibn-Hibban-Tamil-.
Ibn-Hibban-TamilMisc-.
Ibn-Hibban-Shamila-822.
Ibn-Hibban-Alamiah-.
Ibn-Hibban-JawamiulKalim-829.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ், இஸ்ஹாக் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-5095 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.