தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5095

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்…

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அவனையே நான் சார்ந்துள்ளேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது)

என்று கூறினால், “நீ நேர்வழிகாட்டப்பட்டாய்! பொறுப்பேற்கப்பட்டாய்! பாதுகாக்கப்பட்டாய்! என்று அவருக்கு கூறப்படும். மேலும் ஷைத்தான் அவரை விட்டு வெகுதூரத்தில் சென்று விடுவான். அந்த ஷைத்தானிடம் மற்றொரு ஷைத்தான், நேர்வழிகாட்டப்பட்ட, பொறுப்பேற்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட மனிதரின் மீது உனக்கு எப்படி ஆதிக்கம் இருக்கும்? என்று கூறுவான்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

 

(அபூதாவூத்: 5095)

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ الْخَثْعَمِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَيْتِهِ فَقَالَ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، قَالَ: يُقَالُ حِينَئِذٍ: هُدِيتَ، وَكُفِيتَ، وَوُقِيتَ، فَتَتَنَحَّى لَهُ الشَّيَاطِينُ، فَيَقُولُ لَهُ شَيْطَانٌ آخَرُ: كَيْفَ لَكَ بِرَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ؟


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-4431.
Abu-Dawood-Shamila-5095.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4433.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் நம்பகமானவர் என்றாலும் தத்லீஸ் செய்பவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியில் இவர், இஸ்ஹாக் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும் என்று சிலர் கூறுகின்றனர்.
  • என்றாலும் அல்அஹாதீஸுல் முக்தாரஹ் என்ற நூலில் , இப்னு ஜுரைஜ் அக்பரனீ இஸ்ஹாக்-இஸ்ஹாக் எனக்கு அறிவித்தார் என்று கூறியுள்ளதாக வந்துள்ளது என்பதால் அல்பானீ,பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இந்த செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி பற்றி ஆரம்ப கால அறிஞர்களான புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள், இப்னு ஜுரைஜ் இந்த செய்தியை தவிர வேறு செய்திகளை இஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவித்ததாக எனக்கு தெரியவில்லை என்றும், இவர் இஸ்ஹாக் அவர்களிடம் ஹதீஸை கேட்டுள்ளாரா என்றும் எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

மேலும் தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்த செய்தியை இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் யஹ்யா பின் ஸயீத்,பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.
ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் போன்றோர் அன் இஸ்ஹாக்-இஸ்ஹாகிடமிருந்து (இஸ்ஹாக் வழியாக) என்று அறிவிக்கின்றனர். ஆனால் இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல் மஜீத் பின் அபூரவ்வாத் அவர்கள், ஹுத்திஸ்து அன் இஸ்ஹாக்-இஸ்ஹாக் வழியாக எனக்கு அறிவிக்கப்பட்டது என்று இப்னு ஜுரைஜ் கூறியதாக அறிவித்துள்ளார். இப்னு ஜுரைஜ் மாணவர்களில் இவரின் கூற்றுக்கே முதலிடம் என்பதால் இந்த செய்தியை இப்னு ஜுரைஜ் அவர்கள், இஸ்ஹாக் அவர்களிடம் கேட்கவில்லை என்பதே உண்மை என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்இலலுல் வாரிதா-2346)

(இப்னு ஜுரைஜ் மாணவர்களில் அப்துல் மஜீத் பின் அபூரவ்வாத் அடுத்து ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத் அவர்களின் கூற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்)

1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-5095 , திர்மிதீ-3426 , முஸ்னத் பஸ்ஸார்-6435 , குப்ரா நஸாயீ-9837 , இப்னு ஹிப்பான்-822 , குப்ரா பைஹகீ-10310 ,

2 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3885 .

3 . உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-471 .

4 . இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-8889 .

5 . கஃபுல் அஹ்பார் (ரஹ்) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-20737 .

6 . அபூகுஸைஃபா வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-984 .

வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ பற்றிய ஹதீஸ்கள்:

1 . அபூதாவூத்-5094 ,

2 . அபூதாவூத்-5095 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.