தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3885

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அத்துக்லானு அலல்லாஹ்..

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. சார்ந்திருத்துல் அவனை மட்டுமே)

என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

(இப்னுமாஜா: 3885)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنِ بْنِ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-3885.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3883.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24013-அப்துல்லாஹ் பின் ஹுஸைன் பின் அதாஉ என்பவர் பற்றி இவர் மீது விமர்சனம் உள்ளது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    இமாம் அவர்களும், பலவீனமானவர் என அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோரும் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-322, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார்1/500)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்அதபுல் முஃப்ரத்-1197 , இப்னு மாஜா-3885 , 3886 , ஹாகிம்-1908 ,

மேலும் பார்க்க: அபூதாவூத்-5095 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.