1908. நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அத்துக்லானு அலல்லாஹ்..
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. சார்ந்திருத்துல் அவனை மட்டுமே)
என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
أَخْبَرَنَا أَبُو قُتَيْبَةَ سَالِمُ بْنُ الْفَضْلِ الْآدَمِيُّ بِمَكَّةَ، ثنا مُحَمَّدُ بْنُ نَصْرِ بْنِ مَنْصُورٍ الصَّائِغُ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، ثنا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ يَقُولُ: «بِسْمِ اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ»
هَذَا حَدِيثٌ صَحِيحٌ عَلَى شَرْطِ مُسْلِمٍ، وَلَمْ يُخَرِّجَاهُ
Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-1908.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-1842.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி அப்துல்லாஹ் பின் ஹுஸைன் பின் அதாஉ பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
- ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் இதை சரியானது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இதை மறுத்து இதில் வரும் அப்துல்லாஹ் பின் ஹுஸைன் பலவீனமானவர் என அபூஸுர்ஆ கூறியுள்ளார். என்றாலும் இந்த கருத்தில் வரும் மற்ற செய்திகளை இணைத்து பார்க்கும் போது இது ஹஸன் தரத்தில் அமைந்த செய்தி என்று கூறியுள்ளார்.
(நூல்: நதாயிஜுல் அஃப்கார்-1/167)
மேலும் பார்க்க: இப்னு மாஜா-3885 .
சமீப விமர்சனங்கள்