அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், மா ஷாஅல்லாஹ், தவக்கல்து அலல்லாஹ், ஹஸ்பியல்லாஹு வ நிஃமல் வகீல்…
(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. அவன் நாடியது நடந்தது. அவனையே நான் சார்ந்துள்ளேன். எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்)
என்று கூறட்டும்.
அறிவிப்பவர்: அபூகுஸைஃபா …
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 984)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نَصْرٍ الصَّائِغُ، ثنا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ الْمُسَيَّبِيُّ، ثنا يَحْيَى بْنُ يَزِيدَ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ:
«إِذَا خَرَجَ أَحَدُكُمْ مِنْ بَيْتِهِ فَلْيَقُلْ بِسْمِ اللهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، مَا شَاءَ اللهُ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، حَسْبِي اللهُ وَنِعْمَ الْوَكِيلُ»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-984.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-18451.
- இதில் வரும் பல அறிவிப்பாளர்கள் அறியப்படாதவர்கள். மேலும் ராவீ-49013-யஸீத் பின் அப்துல்மலிக் பலவீனமானவர் என பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவரின் செய்திகள் ஒரு பொருட்டே அல்ல என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம் விமர்சித்துள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும்.4/422 )
6 . இந்தக் கருத்தில் அபூகுஸைஃபா வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-984 ,
மேலும் பார்க்க: அபூதாவூத்-5095 .
சமீப விமர்சனங்கள்