தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-3330

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுதல்.

கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். புதிய பேரீத்தம்பழத்துடன் பழைய பேரீத்தம்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் இதனால் ஷைத்தான் கோபம் கொள்கிறான். மேலும் அவன், “புதிய பேரீத்தம்பழத்துடன் பழைய பேரீத்தம்பழத்தை சாப்பிடும் அளவிற்கு ஆதமுடைய மகன் உயிர்வாழ்கிறான் என்றும் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

(இப்னுமாஜா: 3330)

بَابُ أَكْلِ الْبَلَحِ، بِالتَّمْرِ

حَدَّثَنَا أَبُو بِشْرٍ بَكْرُ بْنُ خَلَفٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ قَيْسٍ الْمَدَنِيُّ قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُلُوا الْبَلَحَ بِالتَّمْرِ، كُلُوا الْخَلَقَ بِالْجَدِيدِ، فَإِنَّ الشَّيْطَانَ يَغْضَبُ، وَيَقُولُ بَقِيَ ابْنُ آدَمَ، حَتَّى أَكَلَ الْخَلَقَ بِالْجَدِيدِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-3321.
Ibn-Majah-Shamila-3330.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-3329.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-48622-யஹ்யா பின் முஹம்மது பின் கைஸ்-அபூ ஸகரிய்யா-அபூஸுகைர் நம்பகமானவர் என்றாலும் அதிகம் தவறிழைப்பவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    கூறியுள்ளார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/1066)

  • இவரின் நான்கு செய்திகளை தவிர மற்றவை சரியானது என இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள் கூறியுள்ளார். அந்த நான்கு செய்திகளில் மேற்கண்ட செய்தியும் ஒன்று.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-2141)

  • இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    இந்த செய்தியை தனது மவ்ளூஆத் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    இந்த செய்தி அடிப்படையற்றது என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    அவர்கள் இந்த செய்தியை அபூஸுகைர் தனித்து அறிவிக்கிறார் என்று கூறியுள்ளார்.

(நூல்: இக்மாலு தஹ்தீபுல் கமால்-5193)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார். தஹபீ,பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இந்த செய்தியை முன்கர் என்று கூறியுள்ளனர். (நூல்: அள்ளயீஃபா-231)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-3330 , முஸ்னத் பஸ்ஸார்-32 , குப்ரா நஸாயீ-6690 , முஸ்னத் அபீ யஃலா-4399 , ஹாகிம்-7138 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.