நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (தந்தையை இழந்த) அனாதையான சிறுவர்களாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், எங்கள் தலையை வறுடிக்கொடுத்து விட்டு “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. நீங்கள் உங்கள் தந்தையின் (அல்லாஹ் அவருக்கு அருள்புரிவானாக!) பரிந்துரையை பெறவேண்டும் என்று நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறிவிட்டு,
(மறுமை நாளில் ஷஹீது எனும்) ஒரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
(bazzar-4085: 4085)حَدَّثنا الحسن بن عَبد العزيز، قَال: حَدَّثنا يَحْيَى بن حسان، قَال: حَدَّثنا الْوَلِيدُ الذِّمَارِيُّ، قَالَ: حَدَّثني نِمْرَانُ بْنُ عُتْبَةَ قَالَ:
دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ صغار فمسحت رؤُوسنا وَقَالَتْ: أَبْشِرُوا بَنِيَّ فَإِنِّي أَرْجُو أَنْ تَكُونُوا فِي شَفَاعَةِ أَبِيكُمْ رَحِمَهُ اللَّهُ إِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ يَقُولُ: قَالَ رَسُول اللهِ صَلَّى اللَّهُ عَلَيه وَسَلَّم: يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ، أَوْ لَيُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ.
Bazzar-Tamil-.
Bazzar-TamilMisc-.
Bazzar-Shamila-4085.
Bazzar-Alamiah-.
Bazzar-JawamiulKalim-7.
சமீப விமர்சனங்கள்