தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2522

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

(ஷஹீத்) உயிர்த்தியாகியின் பரிந்துரை ஏற்கப்படும்.

நிம்ரான் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (தந்தையை இழந்த) அனாதைகளாக உம்முத்தர்தா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள், “ஒரு நற்செய்தியை தெரிந்துக்கொள்ளுங்கள்”. (மறுமை நாளில் ஷஹீது எனும்) ஓரு உயிர்த்தியாகி தமது குடும்பத்தாரில் எழுபது பேருக்கு பரிந்துரை செய்வார். அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று (எனது கணவர்) அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் வலீத் பின் ரபாஹ் அத்திமாரீ என்ற பெயர் ரபாஹ் பின் வலீத் என்பதே சரியாகும்.

(அபூதாவூத்: 2522)

بَابٌ فِي الشَّهِيدِ يُشَفَّعُ

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ رَبَاحٍ الذِّمَارِيُّ، حَدَّثَنِي عَمِّي نِمْرَانُ بْنُ عُتْبَةَ الذِّمَارِيُّ، قَالَ:

دَخَلْنَا عَلَى أُمِّ الدَّرْدَاءِ وَنَحْنُ أَيْتَامٌ، فَقَالَتْ: أَبْشِرُوا، فَإِنِّي سَمِعْتُ أَبَا الدَّرْدَاءَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يُشَفَّعُ الشَّهِيدُ فِي سَبْعِينَ مِنْ أَهْلِ بَيْتِهِ»

قَالَ أَبُو دَاوُدَ: «صَوَابُهُ رَبَاحُ بْنُ الْوَلِيدِ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2522.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2163.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46703-நிம்ரான் பின் உத்பா பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்கள் இவர் யாரென அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இவரை மக்பூல் தரத்தில் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-7/544, மீஸானுல் இஃதிதால்-9119, தக்ரீபுத் தஹ்தீப்-7237)

  • இவரிடமிருந்து ஹரீஸ் பின் உஸ்மான் (மட்டுமே) அறிவித்துள்ளார் என இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    கூறியுள்ளார். (என்றாலும் அந்த அறிவிப்பாளர்தொடர் நாம் பார்த்தவரை கிடைக்கவில்லை)
  • இவரிடமிருந்து வலீத் பின் ரபாஹ் (ரபாஹ் பின் வலீத் மட்டுமே) அறிவித்துள்ளார் என மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார்.

(நூல்: அஸ்ஸிகாத்-7/544, தஹ்தீபுல் கமால்-6473)

  • ஹரீஸ் பின் உஸ்மான் அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் பலமானவர்கள் என அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    இமாம் கூறியுள்ளார். (நூல்: ஸுஆலாதுல் ஆஜுரீ-1741). (காரணம் பலமானவர்கள் வழியாக மட்டுமே ஹதீஸை அறிவிப்போம் என்று முடிவு செய்தவர்களில் ஹரீஸ் பின் உஸ்மானும் ஒருவர்)
  • இதனடிப்படையில் இந்த அறிவிப்பாளர்தொடரை ஹஸன் தரம் என ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    கூறியுள்ளார்.
  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
    இறப்பு ஹிஜ்ரி 748
    வயது: 75
    அவர்களின் கருத்தின் பிரகாரமே இவர் அறியப்படாதவர் என்று முடிவு செய்து இந்த அறிவிப்பாளர்தொடரை பலவீனமானது என்றும் இந்த கருத்து மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி) அவர்கள் வழியாக சரியான அறிவிப்பாளர்தொடரில் வந்துள்ளதால் கருத்து சரியானது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: ஸஹீஹ் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
-2277)

  • அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
    இறப்பு ஹிஜ்ரி 1420
    வயது: 87
    அவர்கள், ஹரீஸ் பின் உஸ்மான் அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் பலமானவர்கள் என்ற கருத்தை ஹிப்பான் பின் ஸைத் என்பவர் விசயத்தில் ஏற்றுள்ளார். (நூல்: அஸ்ஸஹீஹா-‌‌482)
  • இந்தக் கருத்தை நிம்ரான் பின் உத்பா விசயத்தில் கூறவில்லை.

1 . இந்தக் கருத்தில் அபுத்தர்தா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-2522 , முஸ்னத் பஸ்ஸார்-4085 , இப்னு ஹிப்பான்-4660 , குப்ரா பைஹகீ-18527 ,

இதனுடன் தொடர்புடைய செய்தி:

பார்க்க: திர்மிதீ-1663 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.