நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வானத்தில் உள்ள அல்பைதுல் மஃமூருக்கு “அள்ளுராக்” என்று கூறப்படும். மேலும் அது பைதுல் ஹராம் என்ற கஅபாவிற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும். மேலும் ஒவ்வொரு நாளும் அதில் இதற்குமுன் யாரும் பார்த்திராத எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். மேலும் ஏழாவது வானத்திற்கு (மக்காவிற்கு புனித எல்லை இருப்பது போன்று) அதற்கேற்ற அளவு புனித எல்லை உள்ளது.
அறிவிப்பவர்: குரைப் (ரஹ்)
(musannaf-abdur-razzaq-8874: 8874)عَبْدُ الرَّزَّاقِ قَالَ عَنِ الْأَسْلَمِيِّ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْبَيْتُ الْمَعْمُورُ الَّذِي فِي السَّمَاءِ يُقَالُ لَهُ الضّرَاحُ وَهُوَ عَلَى الْبَيْتِ الْحَرَامِ، لَوْ سَقَطَ سَقَطَ عَلَيْهِ يَعْمُرُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَمْ يَرَوْهُ قَطُّ، وَإِنَّ فِي السَّمَاءِ السَّابِعَةِ لَحَرَمًا عَلَى قَدْرِ حَرَمِهِ»
Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-8874.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-8651.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-1058-அஸ்லமீ-இப்ராஹீம் பின் அபூயஹ்யா-அபூஇஸ்ஹாக் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-243)
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-12185 .
சமீப விமர்சனங்கள்