அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். மேலும் அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அது, கஅபாவிற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும். மேலும் ஒவ்வொரு நாளும் அதில் இதற்குமுன் யாரும் பார்த்திராத எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். மக்காவிற்கு புனித எல்லை இருப்பது போன்று அதற்கும் புனித எல்லை உள்ளது. ஒவ்வொரு நாளும் அதில் எழுபதாயிரம் வானவர்கள் நுழைகின்றனர். (ஒரு தடவை நுழைந்த) அவர்கள் மீண்டும் அதில் நுழைவதில்லை.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 12185)حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلَوَيْهِ الْقَطَّانُ، ثنا إِسْمَاعِيلُ بْنُ عِيسَى الْعَطَّارُ، ثنا إِسْحَاقُ بْنُ بِشْرٍ أَبُو حُذَيْفَةَ، ثنا ابْنُ جُرَيْجٍ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
الْبَيْتُ الْمَعْمُورُ: فِي السَّمَاءِ يُقَالُ لَهُ الصراحُ، وَهُوَ عَلَى مِثْلِ بَيْتِ الْحَرَامِ بِحِيَالِهِ لَوْ سَقَطَ لَسَقْطَ عَلَيْهِ يَدْخُلُهُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَمْ يَرَوْنَهُ قَطُّ، وَإِنَّ لَهُ فِي السَّمَاءِ حُرْمَةٌ قَدْرَ حُرْمَةِ مَكَّةَ “
قَالَ: «وَيَدْخُلُ الْبَيْتَ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يُدْخِلُونَهُ أَبَدًا»
Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-12185.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-12026.
إسناد فيه متهم بالوضع وهو إسحاق بن بشر البخاري وهو متهم بالكذب (جوامع الكلم)
وقال الدارقطني : كذاب متروك
لسان الميزان: (2 / 44)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-7027-இஸ்ஹாக் பின் பிஷ்ர் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர். எனவே இது மிக பலவீனமான செய்தியாகும்.
(நூல்: லிஸானுல் மீஸான்-2/44)
- மேலும் இதில் வரும் ராவீ-26543-இப்னு ஜுரைஜ் முதல்லிஸ் (அறிவிப்பாளர்களை இருட்டடிப்பு செய்பவர்) ஆவார். இவர் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அவருடைய அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நூலிலும் இவர் நேடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைக் கூறி அறிவிக்கவில்லை.
- என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள், வேறு சில பலவீனமான செய்திகளையும், முர்ஸலான செய்திகளையும் இணைத்து கஅபா பள்ளிவாசலுக்கு நேராக பைத்துல் மஃமூர் உள்ளது என்ற கருத்தை சரியானது என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-477)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8874 , அல்முஃஜமுல் கபீர்-12185 ,
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-12558 .
சமீப விமர்சனங்கள்