தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-4871

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

காரிஜா பின் ஸைத் பின் ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் அவர்கள், ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் எங்களை எழுத விட்டால் உங்கள் ஹதீஸ்களை எழுதிக்கொள்கிறோம் என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள் “இல்லை” (எழுதக்கூடாது) என்று கூறி மறுத்துவிட்டார். என்றாலும் மர்வான் கூடாரத்திற்கு பின் ஸைத் (ரலி) அவர்களுக்குத் தெரியாமல் ஒருவரை அமரவைத்து மர்வான் ஹதீஸ்களை கேட்க ஸைத் (ரலி) அவர்கள் கூறும் ஹதீஸ்களை எழுத்தாளர் எழுதிக்கொண்டார். பிறகு மர்வான், “அபூஸயீத் (என்ற ஸைத்) அவர்களே! நீங்கள் மறுத்ததை நாங்கள் செய்துவிட்டோம்” என்று கூறினார். அதற்கு ஸைத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! எழுதப்பட்ட அந்த ஏட்டை கொண்டுவராவிட்டால் இதற்கு மேல் ஹதீஸை அறிவிக்கமாட்டேன் என்று கூறினார். எனவே! மர்வான் அதைக் கொண்டு வர அதைக் கிழித்து விட்டு “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்களை எழுதுவதை விட்டு எங்களைத் தடுத்தார்கள்” என்று கூறினார்.

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 4871)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ الْأَصْبَهَانِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ شَوْذَبٍ الْوَاسِطِيُّ، ثنا يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ، ثنا أَبُو الْقَاسِمِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَخِيهِ، عَنْ أَبِيهِ، عَنْ خَارِجَةَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ،

أَنَّ مَرْوَانَ، قَالَ لِزَيْدِ بْنِ ثَابِتٍ: يَا أَبَا سَعِيدٍ، لَوْ أَنَّكَ تَرَكْتَنَا لَكَتَبْنَا عَنْكَ حَدِيثَكَ، فَقَالَ زَيْدٌ: لَا، فَأَجْلَسَ لَهُ مَرْوَانُ كَاتِبًا خَلْفَ الْقُبَّةِ، فَجَعَلَ هُوَ يَسْأَلُ زَيْدًا وَيَكْتُبُ الْكَاتِبُ مَا يُحَدِّثُ بِهِ زَيْدٌ، فَقَالَ: يَا أَبَا سَعِيدٍ مَا أُرَانَا إِلَّا قَدْ ظَفِرْنَا بِمَا أَبَيْتَ قَالَ: وَاللهِ لَا أَرْمِي حَتَّى أُوتَى بِهِ. فَجَاءَ بِالْكِتَابِ فَشَقَّهُ، وَقَالَ: «إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا أَنْ نَكْتُبَ حَدِيثَهُ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-4871.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-4734.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-49350-யஃகூப் பின் முஹம்மத் அஸ்ஸுஹ்ரீ என்பவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என இமாம் அஹ்மத்  கூறியுள்ளார். மேலும் அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். ஸாஜீ அவர்கள் இவர் முன்கருல் ஹதீஸ் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/447)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அபூதாவூத்-3647 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.