தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-9231

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிந்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் அவர் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார். நினைவிலும் வைத்துக்கொள்வார். நான் நினைவில் வைத்துக்கொள்வேன்; கையால் எழுதி வைக்கமாட்டேன்; அவர் நபி (ஸல்)  அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)

 

 

(முஸ்னது அஹ்மத்: 9231)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ وَاقِدٍ الْحَرَّانِيُّ، قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ مُجَاهِدٍ، وَالْمُغِيرَةِ بْنِ حَكِيمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَا: سَمِعْنَاهُ يَقُولُ:

«مَا كَانَ أَحَدٌ أَعْلَمَ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ بِيَدِهِ، وَيَعِيهِ بِقَلْبِهِ، وَكُنْتُ أَعِيهِ بِقَلْبِي، وَلَا أَكْتُبُ بِيَدِي، وَاسْتَأْذَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكِتَابِ عَنْهُ، فَأَذِنَ لَهُ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-9231.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-9022.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-36907-முஹம்மது பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் இவர் ஹஸன் தரத்தில் உள்ளவர் என்பதால் இப்னு ஹஜர்,பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    ஷுஐப் போன்றோர் இந்த செய்தியை ஹஸன் தரம் என்று கூறியுள்ளனர்.

(நூல்: ஃபத்ஹுல் பாரீ-1/249)

மேலும் பார்க்க: புகாரி-113 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.