அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது செல்வத்தை நியாமின்றி அடைய முயற்சிக்கும் ஒருவருடன் சண்டையிட்டவர் அதில் கொல்லப்பட்டால் அவர் இறைவழியில் உயிர்த்தியாகம் செய்தவர் (ஷஹீத்) ஆவார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நஸாயீ இமாம் கூறுகிறார்:
இந்த அறிவிப்பாளர்தொடர் தவறாகும். (இதற்கு முன்னுள்ள-நஸாயீ-4087 ) இல் வரும் ஸுஐர் பின் கிம்ஸ் என்பவர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சரியானது.
(நஸாயி: 4088)أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ حَسَنٍ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يُحَدِّثُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ أُرِيدَ مَالُهُ بِغَيْرِ حَقٍّ فَقَاتَلَ فَقُتِلَ فَهُوَ شَهِيدٌ»
هَذَا خَطَأٌ وَالصَّوَابُ حَدِيثُ سُعَيْرِ بْنِ الْخِمْسِ
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-4088.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-4044.
(1 . இதன் அறிவிப்பாளர்தொடர், ஸுஃப்யான் —> அப்துல்லாஹ் பின் ஹஸன் —> இப்ராஹீம் பின் முஹம்மத் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது.
2 . (இதற்கு முன்னுள்ள-நஸாயீ-4087 ) இன் அறிவிப்பாளர்தொடர் ஸுஐர் பின் கிம்ஸ் —> அப்துல்லாஹ் பின் ஹஸன் —> இக்ரிமா —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்று இடம்பெற்றுள்ளது)
- மேற்கண்ட செய்தியில் இமாம் நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
அவர்களின் விளக்கம் இதில் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. ஏனெனில் துஹ்ஃபதுல் அஷ்ராஃப் என்ற நூலில் மேற்கண்ட இரண்டு அறிவிப்பாளர்தொடரில் ஸுஐப் பின் கிம்ஸ் அவர்களின் அறிவிப்பைவிட ஸுஃப்யான் அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே சரியானது என நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம் கூறியதாக மிஸ்ஸீ இமாம் கூறியுள்ளார்.
(நூல்: துஹ்ஃபதுல் அஷ்ராஃப் பிமஃரிஃபதில் அத்ராஃப்-பாகம்: 6, பக்கம்: 278, 367)
மேலும் பார்க்க: புகாரி-2480 .
சமீப விமர்சனங்கள்