தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-3898

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “(இவர் தான்) முஹம்மது” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், எனக்கு ஸலாம் கூறி (வருக! வருக! என்று) வரவேற்றார்கள்.

பிறகு “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக நல்லது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நான், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டேன். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3898)

حَدَّثَنَا هَارُونُ بْنُ مَلُولٍ الْمِصْرِيُّ، ثنا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْمُقْرِئُ، ثنا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، ثنا أَبُو صَخْرٍ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا خَالِدُ بْنُ خِدَاشٍ، ثنا ابْنُ وَهْبٍ، ثنا أَبُو صَخْرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عُمَرَ، حَدَّثَنِي أَبُو أَيُّوبَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

لَيْلَةَ أُسْرِيَ بِي مَرَرْتُ بِإِبْرَاهِيمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا جِبْرِيلُ مَنْ هَذَا مَعَكَ؟ قَالَ: مُحَمَّدٌ، فَسَلَّمَ عَلَيَّ وَرَحَّبَ بِي وَقَالَ: مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا مِنْ غَرْسِ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيْبَةٌ وَاسِعَةٌ “، فَقُلْتُ: وَمَا غَرْسُ الْجَنَّةِ؟، قَالَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ»


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3898.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-?-அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார்.

மேலும் பார்க்க: அஹ்மத்-23552 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.