தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-274

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையையும் அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்.

அறிவிப்பவர்: அபூபக்ரா (நுஃபைஃ பின் ஹாரிஸ்-ரலி)

(இப்னுமாஜா: 274)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلٍ قَالَ: حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ زَكَرِيَّا قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ، وَلَا صَدَقَةً مِنْ غُلُولٍ»


Ibn-Majah-Tamil-270.
Ibn-Majah-TamilMisc-270.
Ibn-Majah-Shamila-274.
Ibn-Majah-Alamiah-270.
Ibn-Majah-JawamiulKalim-270.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15076-கலீல் பின் ஸகரிய்யா பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் ஹதீஸ்கலை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1762)

சரியான ஹதீஸ் பார்க்க: திர்மிதீ-1 .


4 . இந்தக் கருத்தில் அபூபக்ரா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: இப்னு மாஜா-274 , …


மேலும் பார்க்க: திர்மிதீ-1 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.