தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-3344

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

 நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?’ எனக் கேட்டதற்கு, ‘சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். மேலும் சில வேளைகளில் வானவர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அது எனக்கு எளிதாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்.

அறிவிப்பவர்: ஹாரிஸ் பின் ஹிஷாம் (ரலி)

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 3344)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نَصْرِ بْنِ حُمَيْدٍ الْبَغْدَادِيُّ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ الْأُرْزِيُّ، ثنا عَاصِمُ بْنُ هِلَالٍ، عَنْ أَيُّوبَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، قَالَ:

سَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَيْفَ يَأْتِيكَ الْوَحْيُ؟ قَالَ: يَأْتِينِي صَلْصَلَةً كَصَلْصَلَةِ الْجَرَسِ، وَيَأْتِينِي أَحْيَانًا فِي صُورَةِ رَجُلٍ يُكَلِّمُنِي كَلَامًا، وَهُوَ أَهْوَنُ عَلَيَّ، فَيَفْصِمُ عَنِّي وَقَدْ وَعَيْتُ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-3344.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-3267.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-20456-ஆஸிம் பின் ஹிலால் பற்றி இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    பலவீனமானவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்கள், இவர் அய்யூப் அவர்கள் வழியாக முன்கரான செய்திகளை (அதாவது பலமானவர்களுக்கு மாற்றமாக) அறிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    அவர்கள், இவரின் அதிகமான செய்திகள் பலமானவர்களுக்கு ஒத்ததாக அமையவில்லை என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    அவர்கள் இவர் தவறுதலாக அறிவிப்பாளர்தொடரை மாற்றி விடுபவர்; எனவே இவரை ஆதாரமாக ஏற்கக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
  • அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூதாவூத்,பிறப்பு ஹிஜ்ரி 202
    இறப்பு ஹிஜ்ரி 275
    வயது: 73
    தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    போன்றோர் இவர் சுமாரானவர் என்று கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/260)

அபூஸுர்ஆ அவர்களின் விமர்சனத்தின் படி இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: புகாரி-2 .

2 comments on Almujam-Alkabir-3344

  1. அறிவிப்பாளர் தொடர் தான் பிரச்சனையே தவிர செய்தி பிரச்சினை இல்லை என்று முடிவாகிறதா இல்லையா? அறிவிப்பாளர் தொடர் பிரச்சனையாக இருக்கும் சமயத்தில் செய்தி உண்மையாக இருக்கும் என்று வருகிறதா இல்லையா? அறிவிப்பாளர்களுக்காக செய்தியை விடுவது என்பது அவ்வளவு சரியாக தெரியவில்லையே. ஒரு செய்தி குர்ஆனுக்கு எதிராக இருக்கிறது ஆகவே அந்த செய்தியை விடுகிறோம் என்றால் சரியான விஷயம். அந்த நேரத்தில் நாம் எவ்வளவு பெரிய அறிவிப்பாளர் தொடராக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதேபோல தான் குர்ஆனுக்கு எதிராக இல்லாத போது அறிவிப்பாளர் தொடரையும் நாம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. இங்கே குர்ஆனும் கருத்துக்களும் தான் நிற்கிறதே தவிர அறிவிப்பாளர்கள் அல்ல. ஆளை பார்க்காதே செய்தியை பார் என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு மாற்றமாக செய்தியை பார்க்காதே ஆளை பார் என்று கூறுவது எப்படி சரியாகும். செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமே தவிர ஆளுகளுக்கு அல்ல என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஃபாசிக் ஒருவன் செய்தியை கொண்டு வந்தால் அந்த செய்தியை நன்கு விசாரித்துக் கொள்ளுங்கள் என்றுதான் குர்ஆன் சொல்கிறது ஆளை விசாரிக்க சொல்லவில்லை. செய்தியை நன்றாக ஆய்வு செய்து பாருங்கள் குரானுக்கு எதிராக இருந்தால் அதை விட்டு விடுங்கள் ஆளுகளை பார்க்க தேவையில்லை. தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்.

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      ஒரு செய்தியை சரியான செய்தி என்று அல்லது பலவீனமான செய்தி என்று கூறுவதற்கும், இன்ன செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் சரியானது அல்லது இன்ன செய்தியின் இந்த அறிவிப்பாளர்தொடர் பலவீனமானது என்று கூறுவதற்கும் வித்தியாசம் உள்ளது என்பது ஹதீஸ்கலை நூல்களில் கூறப்படும் சட்டமாகும்.

      நீங்கள் சொல்வது போன்று பலவீனமானவர் இடம்பெற்ற செய்தியை (வேறு செய்தி இருப்பதால்) சரியானது என்று குறிப்பிட்டால் இதே பலவீனமானவர் மட்டும் இடம்பெறும் செய்தியை சிலர் சரியானது என்று கருதிவிடலாம் அல்லவா?.

      அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அறிவிப்பாளர்களின் பலவீனத்தைப் பொருத்து பலவீனமான அறிவிப்பாளர்தொடரை இஸ்னாதுஹூ ளஈஃப் என்றும் கூறுவர். ஸஹீஹ் லிஃகைரிஹீ என்றும் கூறுவர். பொய்யர்கள் இடம்பெற்றால் அதை மிகவும் பலவீனமான அறிவிப்பாளர்தொடர் என்றோ பொய்யான செய்தி என்றோ கூறுவர்.

      இது பற்றி விரிவான விளக்கம்:
      1 . அறிவிப்பாளர்களின் தர விளக்க வார்த்தைகள்.
      2 . ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?
      3 . தரத்தைக் கவனித்து 12 வகை அறிவிப்பாளர்கள்
      போன்ற, ஹதீஸ்கலை பகுதியில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளைக் காணவும்.

      “அதேபோல தான் குர்ஆனுக்கு எதிராக இல்லாத போது அறிவிப்பாளர் தொடரையும் நாம் பார்க்க வேண்டிய தேவை இல்லை” என்ற உங்கள் கருத்து தவறானது.

      மார்க்கத்தில் பித்அத் போன்றவை தோன்றுவதற்கு காரணம்,
      ஆளைப் பார்க்ககூடாது. செய்தியைத் தான் பார்க்கவேண்டும் என்ற இது போன்ற கருத்தால் தான். நாம் பேசுவது உலகச் செய்தி பற்றியதல்ல. நபி (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய செய்திகள்-மார்க்க செய்திகள். இதற்கு அறிவிப்பாளர்களையும் பார்க்க வேண்டும் என்பது ஹதீஸ்துறையின் முக்கிய அம்சம். இது பற்றி விரிவாக காண முஸ்லிம் இமாமின் முன்னுரை பகுதியைக் காணவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.