ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
நரைமுடியை நீக்குவது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரைத்த முடியை நீக்குவதை தடை செய்தார்கள். மேலும் அவர்கள், “அது இறைநம்பிக்கையாளருக்கு ஒளியாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
(முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா: 25951)فِي نَتْفِ الشَّيْبِ
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ:
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ نَتْفِ الشَّيْبِ، وَقَالَ: «هُوَ نُورُ الْمُؤْمِنِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-25951.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-25364.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-முஹம்மது பின் இஸ்ஹாக் பின் யஸார் தத்லீஸ் செய்பவர். இந்த செய்தியின் எந்த அறிவிப்பாளர்தொடரிலும் அம்ர் பின் ஷுஐப் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: திர்மிதீ-2821 .
சமீப விமர்சனங்கள்