அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் செய்தவர் இறைநம்பிக்கையின் பாதி பகுதியை நிறைவுசெய்துவிட்டார். எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(almujam-alawsat-8794: 8794)حَدَّثَنَا مُطَّلِبُ بْنُ شُعَيْبٍ، نا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ، حَدَّثَنِي الْحَسَنُ بْنُ الْخَلِيلِ بْنِ مُرَّةَ، عَنْ أَبِيهِ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ تَزَوَّجَ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الْإِيمَانِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-8794.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-9025.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15099-கலீல் பின் முர்ரா என்பவர் பற்றி அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ் அவர்கள், இவரைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ததை நான் பார்த்ததில்லை; இவர் கதாதா, யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிப்பவை சரியானதாக உள்ளது. இவர் சுறுசுறுப்பில்லாதவராக; சோம்பேறித்தனம் உள்ளவராக இருந்ததால் பஸரா மதீனாவிலிருந்து 1379.1 km தொலைவில் உள்ள ஊர்வாசிகள் இவரை அலட்சியம் செய்தனர் என்று கூறியுள்ளார். - என்றாலும் இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். புகாரீ,பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
போன்ற மற்ற பலஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் இவரை பலவீனமானவர் என்றும், கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். - அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் பலமானவர் அல்ல; நல்லவர் என்றும், அபூஸுர்ஆ அவர்கள், இவர் நல்லவர் என்றும் கூறியுள்ளனர். - இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
இறப்பு ஹிஜ்ரி 365
வயது: 88
அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் அல்ல என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-1729 , அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-3/504, தஹ்தீபுத் தஹ்தீப்-1/555, தக்ரீபுத் தஹ்தீப்-1/302)
- மேலும் இதில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/403)
…
எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972 .
சமீப விமர்சனங்கள்