அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு, நல்ல பெண்ணை (மனைவியாக) அல்லாஹ் வழங்கியுள்ளானோ, அவருக்கு அவருடைய மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்த அல்லாஹ் உதவி செய்துள்ளான். எனவே மீதமுள்ள இரண்டாவது பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(almujam-alawsat-972: 972)وَبِهِ: نا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ رَزَقَهُ اللَّهُ امْرَأَةً صَالِحَةً، فَقَدْ أَعَانَهُ اللَّهُ عَلَى شَطْرِ دِينِهِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي الشَّطْرِ الثَّانِي»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-972.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-992.
- இதன் அறிவிப்பாளர்தொடர்-தப்ரானீ (ஸுலைமான் பின் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
—> அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் மஸ்வூத் —> அம்ர் பின் அபூஸலமா —> ஸுஹைர் பின் முஹம்மத் —> அப்துர்ரஹ்மான் பின் ஸைத் —> அனஸ் (ரலி)
இதன் அறிவிப்பாளர்தொடரில் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் என்பவர் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்று நான் அறிகிறேன். இதன்படி (இவர் அனஸ் (ரலி) அவர்களிடம் ஹதீஸைக் கேட்கவில்லை என்பதால்) இது முன்கதிஃ ஆகும். இதில் வரும் அப்துர்ரஹ்மான் வேறு அப்துர்ரஹ்மான் என்றால் அதைப் பற்றிய விவரம் எனக்குத் தெரியாது என ஹைஸமீ அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: மஜ்மஉஸ் ஸவாஇத்-7434)
- ஹாகிம்-2681 எண்ணில் இடம்பெறும் செய்தியின் மூலம் இவர் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் உக்பா என்று தெரிகிறது. இவரின் செய்திகள் பரவாயில்லை என அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/233, 299 , தஃஜீலுல் மன்ஃபஆ-1/797, தாரீகுல் கபீர்-921, அத்தத்யீலு அலா குதுபில் ஜர்ஹி வத்தஃதீல்-429)
- மேலும் இதில் வரும் ராவீ-16227-ஸுஹைர் பின் முஹம்மத் அபுல்முன்திர் என்பவர் பற்றி சிலர் நம்பகமானவர் என்றும் பலமானவர் என்றும் கூறியிருந்தாலும் வேறு சில அறிஞர்கள் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்றும் ஹதீஸை அறிவிப்பதில் அதிகம் தவறிழைத்தவர் என்றும் விமர்சித்துள்ளனர். புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
அவர்கள் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது முன்கரானவை; பஸராவாசிகள் அறிவிப்பது சரியானவை என்று கூறியுள்ளார். அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
அவர்கள் இவர் ஷாமில் இருக்கும்போது தனது மனனத்திலிருந்து அறிவித்ததில் அதிகம் தவறு ஏற்பட்டுவிட்டது என்று கூறியுள்ளார். - எனவே தான் இவரிடமிருந்து ஷாம்வாசிகள் அறிவிப்பது சரியானதல்ல என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இப்னு அப்தில்பர் அவர்கள் இவர் அனைவரிடமும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். என்றாலும் இது சரியானதல்ல.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/639, தக்ரீபுத் தஹ்தீப்-2060…)
- ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ராவீ-32106-அம்ர் பின் அபூஸலமா ஷாம்வாசி என்பதால் இது பலவீனமடைகிறது.
என்றாலும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இந்த கருத்தில் வரும் செய்திகளை விரிவாகக் குறிப்பிட்டு (முதாபஅத், ஷாஹித் அடிப்படையில்) இந்த செய்தியையும், அல்முஃஜமுல் அவ்ஸத்-8794 எண்ணில் வரும் செய்தியையும் இணைத்து இது பலம்பெறுகின்றது. எனவே இது ஹஸன் தரம் (ஹஸனுன் லிகைரீ) என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-625)
1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அம்ர் பின் அபூஸலமா —> ஸுஹைர் —> அப்துர்ரஹ்மான் பின் ஸைத் —> அனஸ் (ரலி)
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972 , ஹாகிம்-2681 , ஷுஅபுல் ஈமான்-5101 ,
2 . தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) வழியாக வரும் செய்தி:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-21522 .
சமீப விமர்சனங்கள்