அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
திருமணம் செய்தவர் இறைநம்பிக்கையின் பாதி பகுதியை நிறைவுசெய்துவிட்டார். எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(almujam-alawsat-7647: 7647)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُوسَى، نَا مُحَمَّدُ بْنُ سَهْلِ بْنِ مَخْلَدٍ الْإِصْطَخْرِيُّ، نَا عِصْمَةُ بْنُ الْمُتَوَكِّلِ، نَا زَافِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ إِسْرَائِيلَ بْنِ يُونُسَ، عَنْ جَابِرٍ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ تَزَوَّجَ فَقَدِ اسْتَكْمَلَ نِصْفَ الْإِيمَانِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي النِّصْفِ الْبَاقِي»
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-7647.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-7846.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-9987-ஜாபிர் பின் யஸீத் பின் ஹாரிஸ் அல்ஜுஃபீ பற்றி ஷுஃபா அவர்கள், இவர் ஹத்தஸனா, ஸமிஃது என்று அறிவித்தால் அப்போது அவர் மக்களில் பலமானவர் (அதாவது அவரின் செய்தி பலமானது) என்று கூறியுள்ளார். இந்தக் கருத்தையே இமாம் ஸவ்ரீ, ஸுஹைர் பின் முஆவியா போன்றோர் கூறியுள்ளனர். வகீஃ அவர்கள் இவர் பலமானவர் என்று கூறியுள்ளார்.
- என்றாலும் இவர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று ஸயீத் பின் ஜுபைர் அவர்கள் கூறியதாகவும், இவர் (ராபிளிய்யா கொள்கையுடைவர்) என்பதால் நபித்தோழர்களை திட்டுபவர் என ஸாயிதா பின் குதாமா அவர்கள் கூறியதாகவும் உகைலீ பிறப்பு ஹிஜ்ரி
இறப்பு ஹிஜ்ரி 322
அவர்கள் கூறியுள்ளார். இப்னுமயீன், அஹ்மத்,பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இன்னும் பல அறிஞர்கள் ஸாயிதா பின் குதாமா அவர்களின் விமர்சனத்தின் படியே இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் பலவீனமானவர் என்றும் கைவிடப்பட்டவர் என்றும் கூறியுள்ளனர். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள், இவரை ஷுஃபா மட்டுமே பலமானவர் என்று கூறியுள்ளார். மற்ற அறிஞர்கள் இவரை கைவிட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/283, அல்காஷிஃப்-2/197)
- மேலும் இதில் வரும் ராவீ-48783-யஸீத் பின் அபான் நல்லமனிதர் என்றாலும் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-4/403)
…
எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972 .
சமீப விமர்சனங்கள்