தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Hakim-2681

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு, நல்ல பெண்ணை (மனைவியாக) அல்லாஹ் வழங்கியுள்ளானோ, அவருக்கு அவருடைய மார்க்கத்தில் ஒரு பாதியை முழுமைபடுத்த அல்லாஹ் உதவி செய்துள்ளான். எனவே மீதமுள்ள இரண்டாவது பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(ஹாகிம்: 2681)

حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ، ثنا أَحْمَدُ بْنُ عِيسَى بْنِ زَيْدٍ اللَّخْمِيُّ، بِتِنِّيسَ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ التِّنِّيسِيُّ، ثنا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«مَنْ رَزَقَهُ اللَّهُ امْرَأَةً صَالِحَةً، فَقَدْ أَعَانَهُ عَلَى شَطْرِ دِينِهِ، فَلْيَتَّقِ اللَّهَ فِي الشَّطْرِ الثَّانِي»

هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخَرِّجَاهُ، وَعَبْدُ الرَّحْمَنِ هَذَا هُوَ ابْنُ زَيْدِ بْنِ عُقْبَةَ الْأَزْرَقُ مَدَنِيٌّ ثِقَةٌ مَأْمُونٌ


Hakim-Tamil-.
Hakim-TamilMisc-.
Hakim-Shamila-2681.
Hakim-Alamiah-.
Hakim-JawamiulKalim-2607.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-4991-அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    பின் ஈஸா பின் ஸைத்
    பற்றி அபூஸயீத் பின் யூனுஸ் அவர்கள், இவர் குளறுபடியான செய்திகளை அறிவிப்பவர் என்றும்; முஸ்லிமா பின் காஸிம், அபூஸுர்ஆ, இப்னு தாஹிர் போன்றோர், இவர் பொய்யர்; இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னுஹிப்பான் அவர்கள், இவர் அறியப்படாதவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர்; பிரபலமானவர்களிடமிருந்து அறிவிப்பாளர்தொடர்களை மாற்றி அறிவிப்பவர்; எனவே இவர் தனித்து அறிவிக்கும் செய்திகளை ஏற்கக்கூடாது என்று கூறியுள்ளார். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று கூறியுள்ளார்.
  • தாரகுத்னீ,பிறப்பு ஹிஜ்ரி 306
    இறப்பு ஹிஜ்ரி 385
    வயது: 79
    இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் இவர் பலமானவர் அல்ல என்று கூறியுள்ளனர்.

(நூல்: அல்காமிலு ஃபிள்ளுஅஃபா-1/314, லிஸானுல் மீஸான்-1/568, தஹ்தீபுத் தஹ்தீப்-1/39, தக்ரீபுத் தஹ்தீப்-1/ 96)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.