ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு அடியார் திருமணம் செய்துவிட்டால் (அவருக்கு) மார்க்கத்தின் பாதி பகுதி முழுமையடைந்துவிட்டது. எனவே மீதமுள்ள பாதியில் அவர் அல்லாஹ்வை அஞ்சி நடந்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
(shuabul-iman-5100: 5100)أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، نا أَبُو الْعَبَّاسِ هُوَ الْأَصَمُّ، ثنا يَحْيَى بْنُ أَبِي طَالِبٍ، ثنا يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ الْحَضْرَمِيُّ، ثنا الْخَلِيلُ بْنُ مُرَّةَ، ثنا يَزِيدُ الرَّقَاشِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
إِذَا تَزَوَّجَ الْعَبْدُ فَقَدْ كَمُلَ نِصْفُ الدِّينِ، فَلْيَتَّقِ اللهَ فِي النِّصْفِ الْبَاقِي
Shuabul-Iman-Tamil-.
Shuabul-Iman-TamilMisc-.
Shuabul-Iman-Shamila-5100.
Shuabul-Iman-Alamiah-.
Shuabul-Iman-JawamiulKalim-5069.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவி கலீல் பின் முர்ரா, ராவி யஸீத் பின் அபான் போன்றோர் பலவீனமானவர்கள் என்பதால் இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.
மேலும் பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-972.
இந்த ஹதீஸை ஹஸன் தரத்தில் அல்பானி அவர்கள் வைக்கிறார்கள் எப்படி?
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தச் செய்தியில் இடம்பெறும் கலீல் பின் முர்ரா, யஸீத் பின் அபான் ஆகியோரை சிலர் கடுமையாக விமர்சித்திருந்தாலும் வேறு சிலர் இவர்களை நினைவாற்றல் சரியில்லாதவர்கள் என்று விமர்சித்துள்ளனர். பொய்யர்கள் என்றோ, பொய்யெரன சந்தேகிக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது விடப்பட்டவர்கள் என்றோ பார்க்கவில்லை. அல்பானீ அவர்கள் இவர்களின் கருத்தை எடுத்துள்ளார் என்று அவர்களின் ஸஹீஹா-625 ஐ பார்க்கும்போது தெரிகிறது.
سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها (2/ 200):
قلت: فمثلهما، وإن كان لا يحتج بحديثهما ولكن يستشهد به وقد جاء من طريق
أخرى عن أنس هي خير من هذه فمجموعها يقوي الحديث ويرتقي إلى درجة الحسن
…
அடுத்து அல்முஃஜமுல் அவ்ஸத்-972 இல் வரும் அறிவிப்பாளர் ஸுஹைர் பற்றிய விமர்சனமும் நினைவாற்றல் சரியில்லாதவர் என்பதாகும்.
இது போன்று நினைவாற்றல் சரியில்லாதவர் தனித்து அறிவிக்கும் செய்தி பலவீனமாகும். இந்த நிலை உள்ளவர்களில் இருவரோ அல்லது பலரோ அறிவிக்கும் போது அவர்கள் அதை சரியாக மனனமிட்டுள்ளனர் என்று சில அறிஞர்கள் கருதுகிறார்கள். எனவே தான் இதை ஹஸன் (லிஃகைரிஹீ) என்று கூறியுள்ளார்.
இரு செய்திகளை இணைத்து ஹஸன் என்று கூறினால் அது ஹஸன் லிஃகைரிஹீ ஆகும். ஒரு செய்தியை மட்டும் ஹஸன் என்று கூறினால் அது ஹஸன் லிதாதிஹீ ஆகும் என்பது ஹதீஸ்கலை விதியிலிருந்து நாம் புரிந்துக் கொள்ளும் சட்டமாகும்.
கூடுதல் தகவல் அறிய: ஹஸன் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன? என்ற கட்டுரையைக் காணவும்.
و عليكم أسلم ,جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا,