தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-5072

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அபூஸல்லாம்-மம்தூர் அல்அஸ்வத் அவர்கள் கூறியதாவது:

நான் ஹிம்ஸ் நகர பள்ளிவாசலில் இருக்கும் போது ஒரு மனிதர் என்னைக் கடந்து சென்றார். அப்போது மக்கள், “(இதோ) இவர் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளராக இருந்தவர் என்று கூறினர். உடனே நான் எழுந்து சென்று அவரிடம், “உங்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் வேறு அறிவிப்பாளர் இல்லாமல் நீங்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கூறினேன்.

அப்போது அவர்கள், “ஒருவர் காலையிலும், மாலையிலும், “ரளீனா பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதிர் ரஸூலா” எனக் கூறினால் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன் என்று கூறினார்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

(அபூதாவூத்: 5072)

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَقِيلٍ، عَنْ سَابِقِ بْنِ نَاجِيَةَ، عَنْ أَبِي سَلَّامٍ،

أَنَّهُ كَانَ فِي مَسْجِدِ حِمْصَ فَمَرَّ بِهِ رَجُلٌ فَقَالُوا: هَذَا خَدَمَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ إِلَيْهِ فَقَالَ: حَدِّثْنِي بِحَدِيثٍ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَتَدَاوَلْهُ بَيْنَكَ وَبَيْنَهُ الرِّجَالُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: ” مَنْ قَالَ إِذَا أَصْبَحَ وَإِذَا أَمْسَى: رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ رَسُولًا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-5072.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-4412.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-16665-ஸாபிக் பின் நாஜியா பற்றி இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
    இறப்பு ஹிஜ்ரி 354
    வயது: 79
    முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
    மட்டுமே பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். மேலும் இவரிடமிருந்து அபூஅகீல்-ஹாஷிம் பின் பிலால் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் ஸாபிக் பின் நாஜியா யாரென அறியப்படாதவர் ஆவார்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-1/674)

  • இந்தக் கருத்தில் பெயர் குறிப்பிடப்படாத; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகளில் இரு விமர்சனம் உள்ளது.

1 . அறிவிப்பாளர்தொடரில் குளறுபடி உள்ளது. 2 . இவற்றில் வரும் ஸாபிக் பின் நாஜியா அறியப்படாதவர் ஆவார். மேலும் அபூஸல்லாம் என்ற அறிவிப்பாளர்பற்றி அபூஸலாம், அபூஸல்லாம் அல்பரா, அபூஸல்லாம் ஸாபிக் பின் நாஜியா என்று வெவ்வேறான பெயர்கள் வருவதால் அவர் அறியப்படாதவர் ஆவார் என்று அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார். மேலும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், அபூஸல்லாம் என்பவர் மம்தூர் என்ற தாபிஈ என்று கூறியிருந்தாலும் அஹ்மத்-23112 எண்ணில் ஷுஃபா அவர்களிடமிருந்து அஃப்பான் அறிவிக்கும் அறிவிப்பில் அபூஸல்லாம் அல்பரா என்று இடம்பெற்றுள்ளது என்பதால் அபூஸல்லாம் மம்தூர் என்பவர் என்று கூறுவது சரியாகாது என்றும் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அள்ளயீஃபா-5020)

  • என்றாலும் இமாம் மிஸ்ஸீ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    போன்றோர் மிஸ்அர் அறிவிக்கும் அறிவிப்பைவிட ஷுஃபா, ஹுஷைம் போன்றோர் அறிவிக்கும் அறிவிப்பாளர்தொடரே மஹ்ஃபூள் என்று கூறியுள்ளனர்; இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள் இந்த அறிவிப்பாளர்தொடரை பலமானது என்றும் கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-7422, அல்இஸாபா-12/313, ஃபத்ஹுல் பாரீ-11/134)

2 . இந்தக் கருத்தில் ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:

1 . ஷுஃபா, ஹுஷைம் —> அபூஅகீல் (ஹாஷிம் பின் பிலால்) —> ஸாபிக் பின் நாஜியா —> அபூஸல்லாம் (மம்தூர் ?) —> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான ஒரு நபித்தோழர்.

பார்க்க: அஹ்மத்-18967 , 18969 , 23111 , அபூதாவூத்-5072 , குப்ரா நஸாயீ-9747 , 10324 ,

2 . ஷுஃபா —> அபூஅகீல் (ஹாஷிம் பின் பிலால்) —> ஸாபிக் பின் நாஜியா —> அபூஸல்லாம் அல்பரா —> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான ஒரு நபித்தோழர்.

பார்க்க: அஹ்மத்-23112 ,

3 . ஷுஃபா —> அபூஅகீல் (ஹாஷிம் பின் பிலால்) —> அபூஸல்லாம் ஸாபிக் பின் நாஜியா—> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான ஒரு நபித்தோழர்.

பார்க்க: ஹாகிம்-1905 ,

4 . மிஸ்அர் —> அபூஅகீல் (ஹாஷிம் பின் பிலால்)  —> ஸாபிக் பின் நாஜியா —> அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான அபூஸலாம் (அபூஸல்லாம்).

பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-26541 , 29281 , இப்னு மாஜா-3870 , அல்முஃஜமுல் கபீர்-921 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-3829 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.