பாடம் : 31
அல்லாஹ் (தனது பாதையில்) அறப்போர் புரிந்தவர்களுக்காகச் சொர்க்கத்தில் தயாரித்து வைத்துள்ள படித்தரங்கள்.
அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என்னிடம்) “அபூஸயீத்! அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் எனவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்குச் சொர்க்கம் உறுதியாகிவிட்டது” என்று கூறினார்கள்.
இதைக் கேட்டு வியப்படைந்த நான், “மீண்டும் ஒரு முறை சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். (மீண்டும்) அவ்வாறே அவர்கள் சொல்லிவிட்டு, இன்னொன்றும் சொல்கிறேன். சொர்க்கத்தில் ஓர் அடியார் நூறு படித்தரங்களுக்கு உயர்த்தப்படுவார். ஒவ்வோர் இரு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைவு இருக்கும்” என்று கூறினார்கள்.
நான், “அது என்ன (நற்செயலுக்குக் கிடைக்கும் வெகுமதி), அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல், அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல்” என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 33
(முஸ்லிம்: 3829)31 – بَابُ بَيَانِ مَا أَعَدَّهُ اللهُ تَعَالَى لِلْمُجَاهِدِ فِي الْجَنَّةِ مِنَ الدَّرَجَاتِ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ وَهْبٍ، حَدَّثَنِي أَبُو هَانِئٍ الْخَوْلَانِيُّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«يَا أَبَا سَعِيدٍ، مَنْ رَضِيَ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، وَجَبَتْ لَهُ الْجَنَّةُ»، فَعَجِبَ لَهَا أَبُو سَعِيدٍ، فَقَالَ: أَعِدْهَا عَلَيَّ يَا رَسُولَ اللهِ، فَفَعَلَ، ثُمَّ قَالَ: «وَأُخْرَى يُرْفَعُ بِهَا الْعَبْدُ مِائَةَ دَرَجَةٍ فِي الْجَنَّةِ، مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»، قَالَ: وَمَا هِيَ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ، الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ»
Muslim-Tamil-3829.
Muslim-TamilMisc-.
Muslim-Shamila-1884.
Muslim-Alamiah-.
Muslim-JawamiulKalim-3503.
- மேற்கண்ட செய்தியை 1 . அபூஹானீ-ஹுமைத் பின் ஹானீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்னு வஹ்ப் அவர்கள் ஒரு அறிவிப்பாளர்தொடரில் ஒரு கருத்தை கூறியுள்ளார். 2 . அபூஹானீ-ஹுமைத் பின் ஹானீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ் அவர்கள் வேறு அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட கருத்தில் சிறுமாற்றத்துடன் அறிவித்துள்ளார்.
- இருவரில் இப்னு வஹ்ப் அவர்களே மிகப் பலமானவர் என்பதால் அவர் அறிவிக்கும் செய்திக்கே முதலிடம் தரவேண்டும். அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ் அவர்களின் அறிவிப்பின் மூலம் ரளீத்து பில்லாஹி.. என்ற வார்த்தையைக் கூறினால் சொர்க்கம் உறுதி என்று புரிந்துக்கொள்வோம். இப்னு வஹ்ப் அவர்களின் அறிவிப்பின் மூலம் அவ்வாறு நம்பினால் சொர்க்கம் உறுதி என்று புரிந்துக்கொள்வோம்.
- எனவே இப்னு வஹ்ப் அவர்களின் அறிவிப்பின் மூலம் அப்துர்ரஹ்மான் பின் ஷுரைஹ் அவர்கள் அறிவிக்கும் செய்தியின் கருத்தை “யார் லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுகிறாரோ அவர் சொர்க்கம் செல்வார் என்பதை எவ்வாறு புரிந்துக்கொள்வோமோ அவ்வாறு புரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்தக் கருத்தில் கீழே குறிப்பிட்டுள்ள செய்திகளில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகளைத் தவிர மற்றவை பலவீனமாக உள்ளன.
1 . இந்தக் கருத்தில் அபூஸயீத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபூஅப்துர்ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் யஸீத்) —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: அஹ்மத்-11102 , முஸ்லிம்-3829 , நஸாயீ-3131 , குப்ரா நஸாயீ-4324 , 9749 , இப்னு ஹிப்பான்-4612 , அல்முஃஜமுல் அவ்ஸத்-3167 , குப்ரா பைஹகீ-18493 ,
- அபூஹானீ —> அபூஅலீ —> அபூஸயீத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-29282 , அபூதாவூத்-1529 , குப்ரா நஸாயீ-9748 , இப்னு ஹிப்பான்-863 , அல்முஃஜமுல் அவ்ஸத்-8742 , ஹாகிம்-1904 , 2461 ,
2 . ஒரு நபித்தோழர் வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-5072 .
3 . ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: திர்மிதீ-3389 .
4 . முனைதிர் அல்அஸ்லமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-838 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-630 .
சமீப விமர்சனங்கள்