தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-3389

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் மாலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)

(திர்மிதி: 3389)

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ أَبِي سَعْدٍ سَعِيدِ بْنِ المَرْزُبَانِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ ثَوْبَانَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

مَنْ قَالَ حِينَ يُمْسِي: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ “

«هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3389.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3336.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-17214-ஸயீத் பின் மர்ஸுபான்-அபூஸயீத் என்பவர் பலவீனமானவர்; தத்லீஸ் செய்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/387)

3 . இந்தக் கருத்தில் ஸவ்பான் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-3389 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-3829 .

1 comment on Tirmidhi-3389

  1. ஜமி உத் திர்மிதீ -3388 வரும் “பிஸ்மில்லா ஹில்லதீ” என்று தொடங்கும் துஆ சரியானதா? சகோதரரே..இதன் தரம் பதிவு செய்ய முடியுமா சகோதரரே?

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.