தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Almujam-Alkabir-838

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

ஒருவர் காலையில், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” என்று கூறினால் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் சேர்ப்பதற்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றேன்.

(பொருள்: அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும் நான் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டேன்.)

அறிவிப்பவர்: முனைதிர் (ரலி)

 

(தப்ரானி–அல்முஃஜமுல் கபீர்: 838)

حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا الْجَرَّاحُ بْنُ مَخْلَدٍ، ثنا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، ثنا رِشْدِينُ بْنُ سَعْدٍ، عَنْ حَيِّ بْنِ عَبْدِ اللهِ الْمَعَافِرِيِّ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنِ الْمُنَيْذِرِ صَاحِبِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَكَانَ يَكُونُ بِإِفْرِيقِيَّةَ – قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

مَنْ قَالَ إِذَا أَصْبَحَ: رَضِيتُ بِاللهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، فَأَنَا الزَّعِيمُ لِآخُذَ بِيَدِهِ حَتَّى أُدْخِلَهُ الْجَنَّةَ


Almujam-Alkabir-Tamil-.
Almujam-Alkabir-TamilMisc-.
Almujam-Alkabir-Shamila-838.
Almujam-Alkabir-Alamiah-.
Almujam-Alkabir-JawamiulKalim-17255.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-15783-ரிஷ்தீன் பின் ஸஃத் பற்றி இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள் பலவீனமானவர் என்றும், இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அவர்கள் இவர் ஒரு பொருட்டே அல்ல என்றும், இப்னு நுமைர் பிறப்பு ஹிஜ்ரி 115
    இறப்பு ஹிஜ்ரி 199
    வயது: 84
    அவர்கள் இவரின் செய்திகளை எழுதிக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர்.
  • இமாம் அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்கள், இவர் நல்ல மனிதர் என்றாலும் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். இவர் அறிவிக்கும் நல்உபதேசம் சார்ந்த ஹதீஸ்கள் பரவாயில்லை என்று கூறியுள்ளார்.
  • அபூஹாதிம் பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அவர்கள், இவரிடம் கவனக்குறைவு உள்ளது; இவர் பலமானவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார் என்பதால் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். அபூஸுர்ஆ அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-2320, அல்காமிஃலு ஃபிள்ளுஅஃபா-669, தஹ்தீபுத் தஹ்தீப்-3/278)..

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

4 . இந்தக் கருத்தில் முனைதிர் அல்அஸ்லமீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அல்முஃஜமுல் கபீர்-838 ,

மேலும் பார்க்க: முஸ்லிம்-3829 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.