தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Abu-Dawood-2516

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள்.

இது மக்களுக்கு பெரும் சிரமமாக ஆனது. எனவே அவர்கள், அந்த மனிதரிடம், “நபி (ஸல்) அவர்களிடம் நீ விளக்கமாக கேட்கவில்லை போலும்! மீண்டும் அவர்களிடம் விளக்கமாக கேட்பீராக!” என்று கூறினர். எனவே அவர் மீண்டும், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் உலகின் ஏதேனும் ஒரு பொருளை எதிர்ப்பார்த்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்ய விரும்புகிறார். (அவர் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள். மக்கள் மீண்டும் அவரிடம் விளக்கமாக கேட்குமாறு கூற மூன்றாவது தடவையும் அவர் கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு கூலி இல்லை” என்று பதிலளித்தார்கள்.

(அபூதாவூத்: 2516)

حَدَّثَنَا أَبُو تَوْبَةَ الرَّبِيعُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ الْمُبَارَكِ، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ، عَنِ ابْنِ مِكْرَزٍ، رَجُلٍ مِنْ أَهْلِ الشَّامِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،

أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أَجْرَ لَهُ». فَأَعْظَمَ ذَلِكَ النَّاسُ، وَقَالُوا لِلرَّجُلِ: عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَعَلَّكَ لَمْ تُفَهِّمْهُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ يُرِيدُ الْجِهَادَ فِي سَبِيلِ اللَّهِ، وَهُوَ يَبْتَغِي عَرَضًا مِنْ عَرَضِ الدُّنْيَا، فَقَالَ: «لَا أَجْرَ لَهُ». فَقَالُوا: لِلرَّجُلِ عُدْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُ: الثَّالِثَةَ. فَقَالَ لَهُ: «لَا أَجْرَ لَهُ»


Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-.
Abu-Dawood-Shamila-2516.
Abu-Dawood-Alamiah-.
Abu-Dawood-JawamiulKalim-2158.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-8840-இப்னு மிக்ரஸ் என்பவரின் பெயர் அய்யூப் பின் மிக்ரஸ், என்றும் யஸீத் பின் மிக்ரஸ் என்றும் வந்துள்ளது.
  • இப்னுல் மதீனீ பிறப்பு ஹிஜ்ரி 161
    இறப்பு ஹிஜ்ரி 234
    வயது: 73
    அவர்கள், மேற்கண்ட செய்தியை அறிவிக்கும் இப்னு மிக்ரஸ் என்பவரும், அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் என்பவரும் வேறு நபர்கள் ஆவார்கள். இப்னு மிக்ரஸ் என்பவரிடமிருந்து புகைர் மட்டுமே அறிவித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார்.

அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் என்பவர் இப்னு மஸ்வூத் (ரலி) , வாபிஸா (ரலி) போன்றோரிடமிருந்து அறிவித்துள்ளார். இவரிடமிருந்து ஸுபைர் அபூஅப்துஸ்ஸலாம் என்பவரும், ஷுரைஹ் என்பவரும் அறிவித்துள்ளனர் என்ற குறிப்புகளை அதிகமானோர் கூறியுள்ளனர்.

1 . மிஸ்ஸீ இமாம் அவர்களும் இவ்வாறே கூறியுள்ளார். 2 . தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் ஒரு இடத்தில் இருவரும் ஒருவராக இருக்கலாம் என்று கூறிவிட்டு வேறு இடத்தில் இருவரும் வெவ்வேறானவர்கள் என்று கூறியுள்ளார்.

(நூல்: தஹ்தீபுல் கமால்-3/479, மீஸானுல் இஃதிதால்-1/290, 4/596, தத்ஹீபுத் தஹ்தீப்-620)

3 . இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
அவர்கள், அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் என்பவரின் நிலை அறியப்படவில்லை என்று கூறிவிட்டு அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
அவர்கள் பதிவு செய்துள்ள செய்தியில் இடம்பெறுபவர் அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்-1/160, 118-607)

  • இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் பற்றி இவர் அறிவிக்கும் ஒரு செய்தியைப் போன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதாவது இவர் தனித்து அறிவித்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

(நூல்: லிஸானுல் மீஸான்-9/265)

  • ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346
    இறப்பு ஹிஜ்ரி 1438
    வயது: 92
    அவர்கள், (அபுல்காஸிம் இப்னு அஸாகிர் அவர்களின் கருத்தின்படி) இருவரும் ஒருவரே என்று கூறியுள்ளார். காரணம் இப்னு மிக்ரஸ் பற்றி வரும் சில குறிப்பில் ஷாம் நாட்டைச் சேர்ந்த; பனூஆமிர் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் என்று வந்துள்ளது. இவ்வாறே சில இடங்களில் அய்யூப் பின் அப்துல்லாஹ் பின் மிக்ரஸ் பற்றி வரும் குறிப்புகளிலும் வந்துள்ளது. எனவே இருவரும் ஒருவரே.
  • இந்த விளக்கத்தின் அடிப்படையில் இவரிடமிருந்து மூவர் அறிவித்துள்ளனர் என்ற கணக்கு வருகிறது. மேலும் இவரைப் பற்றி புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 256
    வயது: 62
    அவர்கள், இவர் உரை நிகழ்த்தக்கூடியவராக இருந்தார் என்று கூறியுள்ளார். இப்னு அஸாகிர் அவர்கள், முஆவியா (ரலி) அவர்கள் இவரை ஹிஜ்ரீ 50 இல் ரோமில் நடைப்பெற்ற போருக்குத் தளபதியாக நியமித்தார் என்று கூறியுள்ளார். எனவே
    இவர் அறியப்படாதவர் என்று ஆகமாட்டார் என்று கூறி இந்த செய்தியை (ஆதாரத்திற்கேற்ற) ஹஸன் தரம் என்று கூறியுள்ளார்.

(நூல்: தாரீகுல் கபீர்-2/185, தாரீகு திமிஷ்க்-860 (10/110)

இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

  • புகைர் —> இப்னு மிக்ரஸ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: அஹ்மத்-7900 , 8793 , அபூதாவூத்-2516 , இப்னு ஹிப்பான்-4637 , ஹாகிம்-2436 , குப்ரா பைஹகீ-18551 ,

  • புகைர் —> வலீத் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
    இறப்பு ஹிஜ்ரி 59
    வயது: 71
    நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
    (ரலி) 

பார்க்க: ஹாகிம்-3404 ,

இன்ஷா அல்லாஹ் கூடுதல் தகவல்கள் பிறகு சேர்க்கப்படும்.

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: நஸாயீ-3140 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.