அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கவாசிகளின் மனைவியர், தங்களின் கணவர்களுக்காக அழகிய குரலில் பாடுவார்கள். (அதுபோன்ற) அழகான குரலை இதுவரை யாரும் கேட்டிருக்கமாட்டார்கள்.
அவர்களின் பாடல்களில் சிலவை:
(நாங்கள் நல்ல பேரழகிகள்; சங்கைக்குரியோரின் மனைவியர்; கண்குளிர (தன் கணவரைக்) கண்டு ரசிப்பவர்கள்,
நாங்கள் நீடித்து இருப்போம்; மடிந்து போகமாட்டோம், நாங்கள் பாதுகாப்பு பெற்றோர்; எனவே பயப்படமாட்டோம், நாங்கள் நிரந்தரமாக இங்கே இருப்போம்; இதிலிருந்து வெளியேற மாட்டோம்)
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(almujam-alawsat-4917: 4917)
حَدَّثَنَا عُمَارَةُ بْنُ وَثِيمَةَ قَالَ: نَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ: أَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«إِنَّ أَزْوَاجَ أَهْلِ الْجَنَّةِ لَيُغَنِّينَ أَزْوَاجَهُنَّ بِأَحْسَنِ أَصْوَاتٍ سَمِعَهَا أَحَدٌ قَطُّ. إِنَّ مِمَّا يُغَنِّينَ بِهِ: نَحْنُ الْخَيْرَاتُ الْحِسَانْ. أَزْوَاجُ قَوْمٍ كِرَامْ. يَنْظُرْنَ بِقُرَّةِ أَعْيَانْ. وَإِنَّ مِمَّا يُغَنِّينَ بِهِ: نَحْنُ الْخَالِدَاتُ فَلَا يَمُتْنَهْ. نَحْنُ الْآمِنَاتُ فَلَا يَخَفْنَهْ. نَحْنُ الْمُقِيمَاتُ فَلَا يَظْعَنَّهْ»
لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ إِلَّا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، تَفَرَّدَ بِهِ: ابْنُ أَبِي مَرْيَمَ
Almujam-Alawsat-Tamil-.
Almujam-Alawsat-TamilMisc-.
Almujam-Alawsat-Shamila-4917.
Almujam-Alawsat-Alamiah-.
Almujam-Alawsat-JawamiulKalim-.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-31093-உமாரா பின் வஸீமாவைப் பற்றி விமர்சனம் இல்லை. இவரைப் பற்றி வரலாற்று ஆசிரியர் என இப்னுல் ஜவ்ஸீ,பிறப்பு ஹிஜ்ரி 508/510
இறப்பு ஹிஜ்ரி 597
இப்னு கஸீர்,பிறப்பு ஹிஜ்ரி 700
இறப்பு ஹிஜ்ரி 774
வயது: 74
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்றோர் கூறியுள்ளனர்.
(நூல்: அல்முன்தளமு ஃபீ தாரீகில் உமமி வல்முலூக்-13/13, அல்பிதாயா வந்நிஹாயா-14/718 (11/108) , தாரீகுல் இஸ்லாம்-373)
- தப்ரானீ அவர்களின் ஆசிரியர்களின் விவரங்களைத் தொகுத்த அபுத்தய்யிப் அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: இர்ஷாதுல் காஸீ, வத்தானீ-704)
- மேற்கண்ட செய்தியை பற்றி இமாம் முன்திரீ, ஹைஸமீ போன்றோர் இதில் வரும் அறிவிப்பாளர்கள் சரியான அறிவிப்பாளர்கள் என்று கூறியுள்ளனர். (நூல்: அத்தர்கீப்-4/538, மஜ்மஉஸ் ஸவாஇத்-10/419)
- இந்த செய்தியை அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் தனது ஸஹீஹாவில் குறிப்பிட்டுள்ளார். என்றாலும் தனக்கு உமாரா பின் வஸீமா வைப் பற்றிய தகவல் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-3002)
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அல்முஃஜமுல் அவ்ஸத்-4917 , அல்முஃஜமுஸ் ஸகீர்-734 ,
2 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-33988 .
தரம் வேண்டும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த வகையினர் இடம்பெறும் செய்தி ஹஸன் தரம்.