பாடம்:
இதஷ் ஷம்ஸு குவ்விரத் என்ற 81 வது அத்தியாயம்.
யார் மறுமை நாளை நேரடியாக பார்க்க விரும்புவாரோ அவர், சூரியன் சுருட்டப்பட்டு விடும் போது (என்று ஆரம்பிக்கும் 81 வது அத்தியாயத்தையும்), வானம் பிளந்து விடும்போது (என்று ஆரம்பிக்கும் 82, 84 வது அத்தியாயங்களையும்) ஓதட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
(திர்மிதி: 3333)بَاب وَمِنْ سُورَةِ إِذَا الشَّمْسُ كُوِّرَتْ
حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ العَظِيمِ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ بَحِيرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ وَهُوَ ابْنُ يَزِيدَ الصَّنْعَانِيُّ، قَالَ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى يَوْمِ القِيَامَةِ كَأَنَّهُ رَأْيُ عَيْنٍ» فَلْيَقْرَأْ: إِذَا الشَّمْسُ كُوِّرَتْ، وَإِذَا السَّمَاءُ انْفَطَرَتْ، وَإِذَا السَّمَاءُ انْشَقَّتْ
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-3333.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-3277.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-22517-அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அஸ்ஸன்ஆனீ பற்றி, இப்ராஹீம் பின் காலித் அவர்கள் இவர் வஹ்ப் பின் முனப்பிஹ் என்பவரை விட ஹலால், ஹராம் சட்டங்களை நன்கு அறிந்தவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-2/567, தக்ரீபுத் தஹ்தீப்-1/604)
- இந்த செய்தியை ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321
இறப்பு ஹிஜ்ரி 405
வயது: 84
அவர்கள் சரியானது என்று கூறியிருப்பதை ஆய்வு செய்த தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்களும் இதை சரியானது என்று கூறியுள்ளார். அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்களும் இருவர் கூறியிருப்பதும் சரியானதே என்று கூறியுள்ளார்.
(நூல்: அஸ்ஸஹீஹா-1081)
இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-5997 , அஹ்மத்-4806 , 4934 , 4941 , 5755 , திர்மிதீ-3333 , அல்முஃஜமுல் கபீர்-14149 , ஹாகிம்-3900 , 8719 ,
Idhil abdur rahman bin yazid sanaani balaveenamanaga ullar.seri paarkavum
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஜஸாகல்லாஹு கைரா. தாங்கள், பலவீனம் என்று கூறியதற்கு அறிஞரின் கூற்றை அல்லது காரணத்தை குறிப்பிடுவது நன்று.
Adhil ibn hibban mattum avarai namabakavanavar enra koorapttuthu jawamul kalim
அஸ்ஸலாமு அலைக்கும்.
இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறியிருந்தால் அவர் அறியப்படாதவர்களையும் அப்படி கூறுவார் என்பதால் அவரை பலவீனமானவர் என்று சிலர் கூறுவண்டு. என்றாலும் இவர் வேறு வகையில் அறியப்பட்டவர். இவரை இப்ராஹீம் பின் காலித் என்ற அறிஞர் பாராட்டியுள்ளார். இதனால் தான் இப்னு ஹஜர் அவர்கள் இவரை ஸதூக் என்ற தரத்தில் கூறியுள்ளார்.
(இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் எப்போது ஏற்கலாம், எப்போது ஏற்கக்கூடாது என்பதில் விரிவான விளக்கம் உள்ளது என்பது தனி விசயம்.)
Inshaallah andaa thagavalum tamilakkam seidhaal rombaa udhaviyaagaa irukkum
இன்ஷா அல்லாஹ் பதிவு செய்கிறோம்…