தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musnad-Ahmad-6903

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆன் ஓதாமல் தொழப்படும் எந்தத் தொழுகையும் குறை உடையதாகும்; குறை உடையதாகும்; குறை உடையதாகும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

(முஸ்னது அஹ்மத்: 6903)

حَدَّثَنَا نَصْرُ بْنُ بَابٍ، عَنْ حَجَّاجٍ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«كُلُّ صَلَاةٍ لَا يُقْرَأُ فِيهَا، فَهِيَ خِدَاجٌ، ثُمَّ هِيَ خِدَاجٌ، ثُمَّ هِيَ خِدَاجٌ»


Musnad-Ahmad-Tamil-.
Musnad-Ahmad-TamilMisc-.
Musnad-Ahmad-Shamila-6903.
Musnad-Ahmad-Alamiah-.
Musnad-Ahmad-JawamiulKalim-6728.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-46380-நஸ்ர் பின் பாப் என்பவர் பற்றி அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    அபூஸுர்ஆ, நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
    இறப்பு ஹிஜ்ரி 303
    வயது: 88
    போன்றோர் இவர் கைவிடப்பட்டவர் என்றும், மற்ற சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் கூறியுள்ளனர்.
  • இப்னு ஸஃத் பிறப்பு ஹிஜ்ரி 168
    இறப்பு ஹிஜ்ரி 230
    வயது: 62
    அவர்கள், ஆரம்பத்தில் இவரிடமிருந்து மக்கள் ஹதீஸை கேட்டனர். இவர் இப்ராஹீம் அஸ்ஸாயிக் என்பவரிடமிருந்து ஹதீஸை அறிவித்தபோது மக்கள் இவரை விட்டுவிட்டனர் என்று கூறியுள்ளார். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
    இறப்பு ஹிஜ்ரி 241
    வயது: 77
    அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-8/469, லிஸானுல் மீஸான்-8/257)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

மேலும் பார்க்க: இப்னு மாஜா-841 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.