தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Abdur-Razzaq-11331

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

முஆதே! அடிமையை உரிமைவிடுவது போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை இல்லை.

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு. அவர் தலாக் கூறியவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)

(musannaf-abdur-razzaq-11331: 11331)

عَبْد ُ الرَّزَّاقِ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ قَالَ: أَخْبَرَنِي حُمَيْدُ بْنُ مَالِكٍ، أَنَّهُ سَمِعَ مَكْحُولًا يُحِدِّثُ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ عَلَى ظَهْرِ الْأَرْضِ أَحَبُّ إِلَيْهِ مِنْ عَتَاقٍ، وَمَا خَلَقَ اللَّهُ عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، فَإِذَا قَالَ الرَّجُلُ لِعَبْدِهِ: هُوَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ، فَهُوَ حُرٌّ، وَلَا اسْتِثْنَاءَ لَهُ، وَإِذَا قَالَ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ، فَلَهُ اسْتِثْنَاؤُهُ وَلَا طَلَاقَ عَلَيْهِ


Musannaf-Abdur-Razzaq-Tamil-.
Musannaf-Abdur-Razzaq-TamilMisc-.
Musannaf-Abdur-Razzaq-Shamila-11331.
Musannaf-Abdur-Razzaq-Alamiah-.
Musannaf-Abdur-Razzaq-JawamiulKalim-11022.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-14273-ஹுமைத் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    அல்லக்மீ
    என்பவர் பற்றி பைஹகீ பிறப்பு ஹிஜ்ரி 384
    இறப்பு ஹிஜ்ரி 458
    வயது: 74
    போன்றோர் அறியப்படாதவர் என்று கூறியிருந்தாலும் இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
    இறப்பு ஹிஜ்ரி 233
    வயது: 75
    அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.
    அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 82
    யஃகூப் பின் ஸுஃப்யான்,பிறப்பு ஹிஜ்ரி 194
    இறப்பு ஹிஜ்ரி 277
    வயது: 83
    உகைலீ,பிறப்பு ஹிஜ்ரி
    இறப்பு ஹிஜ்ரி 322
    ஸாஜீ போன்றோர் கூறியுள்ளனர். இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277
    இறப்பு ஹிஜ்ரி 365
    வயது: 88
    அவர்கள், இவர் குறைவான செய்திகளை அறிவித்துள்ளவர் என்றும்; இவரின் செய்திகள் முன்கர்-நிராகரிக்கப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-3/228, லிஸானுல் மீஸான்-3/301)

  • மேலும் மக்ஹூல் அவர்கள், முஆத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அத்தஹ்கீக்-2/296)

  • எனவே தான் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
    இறப்பு ஹிஜ்ரி 852
    வயது: 79
    நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
    அவர்கள், இதை பலவீனமான, முன்கதிஃயான அறிவிப்பாளர்தொடர் என்று கூறியுள்ளார்.

(நூல்: அத்தல்கீஸ்-3/417)

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும்.

3 . இந்தக் கருத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • மக்ஹூல் —> முஆத் பின் ஜபல் (ரலி) 

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 , முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-18329 , தாரகுத்னீ-3984 , 3985 , குப்ரா பைஹகீ-15120 , 15121 , 15122 ,

  • மக்ஹூல் —> மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
    இறப்பு ஹிஜ்ரி 179
    வயது: 86
    முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.
    பின் யுகாமிர் —> முஆத் பின் ஜபல் (ரலி) 

பார்க்க: தாரகுத்னீ-3986 ,

  • மக்ஹூல் —> காலித் பின் மஃதான் —> முஆத் பின் ஜபல் (ரலி) 

பார்க்க: குப்ரா பைஹகீ-19923 ,

மேலும் பார்க்க: இப்னு மாஜா-2018 .

2 comments on Musannaf-Abdur-Razzaq-11331

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      இந்த செய்தி ஹஸன் என்ற கூறமுடியாத அளவிற்கு குறை உள்ளது.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.