தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Musannaf-Ibn-Abi-Shaybah-18329

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌

18329. ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவள் தலாக் கூறப்பட்டவளாக ஆகமாட்டாள்.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: (ரலி)

முஆத் பின் ஜபல் (ரலி)

معاذ بن جبل

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

தரம்: நபித்தோழர் (ஸஹாபி)


விபரங்கள்

இயற்பெயர்: முஆத் பின் ஜபல்

தந்தை பெயர்: ஜபல் பின் அம்ர் பின் அவ்ஸ்

வம்சம்: கஸ்ரஜ் கோத்திரம், அன்ஸார்

புனைப்பெயர்: அபூ அப்துர்ரஹ்மான்

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, யமன், மக்கா, ஷாம்

பிறப்பு: ஹிஜ்ரிக்கு முன் 18, மதீனா

இறப்பு: ஹிஜ்ரி 18, அமவாஸ் (ஷாம்)

கால கட்டம்: நபித்தோழர்


வாழ்க்கைக் குறிப்பு

முஆத் பின் ஜபல் ரலி அவர்கள் ஒரு நபித்தோழர். ஹலால், ஹராம் விஷயங்களில் நபித்தோழர்களில் மிகவும் அறிந்தவர் என்று நபி (ஸல்) அவர்களால் புகழப்பட்டார். குர்ஆனைத் தொகுத்த ஆறு நபித்தோழர்களில் இவரும் ஒருவர்.

யமன் பகுதிக்கு இஸ்லாத்தைக் கற்றுக்கொடுக்க நபி (ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டார். ஹிஜ்ரி 18 ஆம் ஆண்டு ஷாம் நாட்டில் அமவாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட கொள்ளை நோயில் மரணமடைந்தார்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): முஹம்மத் (ஸல்)

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): இப்னு அப்பாஸ், அபூ மூஸா அல்அஷ்அரீ, அப்துல்லாஹ் பின் அம்ர், இப்னு உமர், அப்துர்ரஹ்மான் பின் ஸம்ரா, அப்துல்லாஹ் பின் அபூ அவ்ஃபா, அனஸ் பின் மாலிக், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அபூ அத்தஃப்பீல், அப்துர்ரஹ்மான் பின் ஃக்னம், அபூ முஸ்லிம் அல்கவ்லானீ, ஷகீக் பின் ஸலமா

வேறு பெயர்கள்: முஆத்


ஆதாரம்: muslimscholars.info (32) · Should verify


حَدَّثَنَا إسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، عَنْ مُعَانِ بْنِ رِفَاعَةَ (1)، عَنْ مَكْحُولٍ ، عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ :

إِذَا قَالَ الرَّجُلُ لاِمْرَأَتِهِ : أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللَّهُ ، فَلَيْسَتْ بِطَالِقٍ ، وَإِذا قَالَ لِعَبْدِهِ : أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللَّهُ ، فَهُوَ حُرٌّ


Musannaf-Ibn-Abi-Shaybah-Tamil-.
Musannaf-Ibn-Abi-Shaybah-TamilMisc-.
Musannaf-Ibn-Abi-Shaybah-Shamila-18329.
Musannaf-Ibn-Abi-Shaybah-Alamiah-.
Musannaf-Ibn-Abi-Shaybah-JawamiulKalim-14321.



  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் மக்ஹூல் அவர்கள், முஆத் (ரலி) அவர்களை சந்திக்கவில்லை என்று இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    அவர்கள் கூறியுள்ளார்.

(நூல்: அத்தஹ்கீக்-2/296)

  • மேலும் இதில் வரும் ராவீ-7845-இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள், தன் ஊரைச் சேர்ந்தவர்களிடமிருந்து அறிவித்தால் தான் அது சரியான செய்தி. ஆனால் இதில் மதீனாவாசியான முஆத் பின் ரிஃபாஆ விடமிருந்து இவர் அறிவித்துள்ளார் என்பதால் இது மேலும் பலவீனமாகிறது.
  • மேலும் இந்தக் கருத்தில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் வழியாக வரும் செய்திகளை இப்னுல் ஜவ்ஸீ பிறப்பு ஹிஜ்ரி 508/510
    இறப்பு ஹிஜ்ரி 597
    கூறியுள்ளார். அதில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் ஹுமைத் பின் மாலிக் வழியாகத் தான் இந்த செய்தியை அறிவித்துள்ளார். (எனவே இது தவறான அறிவிப்பாளர்தொடர் என்று தெரிகிறது)

(நூல்: அல்இலலுல் முதனாஹியா-2/155)

இந்தக் கருத்தையே இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)
போன்ற பல அறிஞர்கள் கூறியுள்ளனர்…

மேலும் பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-11331 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.