தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-879

A- A+


ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

(தொழுகையின் ஆரம்பத்தில்) காதுகளுக்கு நேராக கைகளை உயர்த்துதல்.

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதேன். அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது, அல்லாஹு அக்பர் என தக்பீர் கூறி, தம் கைகளை தம் காதுகளுக்கு நேராக உயர்த்தினார்கள். பிறகு, அல்குர்ஆனின் முதல் அத்தியாயத்தை ஓதி முடித்ததும், “ஆமீன்” என்று தம் சத்தத்தை உயர்த்திச் சொன்னார்கள்.

(நஸாயி: 879)

بَابُ رَفْعِ الْيَدَيْنِ حِيَالَ الْأُذُنَيْنِ

أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الْجَبَّارِ بْنِ وَائِلٍ، عَنْ أَبِيهِ قَالَ:

صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا افْتَتَحَ الصَّلَاةَ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ، ثُمَّ يَقْرَأُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَلَمَّا فَرَغَ مِنْهَا قَالَ: «آمِينَ» يَرْفَعُ بِهَا صَوْتَهُ


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-869.
Nasaayi-Shamila-879.
Nasaayi-Alamiah-869.
Nasaayi-JawamiulKalim-869.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

 


இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: அபூதாவூத்-932.

2 comments on Nasaayi-879

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

    Nassayi. ஹதீஸ் எண் 879 என்பது தொழுகையில் அத்தைகாத்திருப்பில் விரல் அசைப்பதற்கு உண்டான ஹதீஸ் ஆக வந்துள்ளது

    அதாவது வாயில் பின் ஹுஜர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது வந்துள்ள ஹதீஸ்

    ஆனால் நீங்கள் இங்கு பகிர்ந்த ஹதீஸ் தக்பீர் கட்டுவதற்கு உண்டான ஹதீஸாக இருக்கிறது

    விளக்கவும்

    1. வ அலைக்கும் ஸலாம்.

      நீங்கள் ஹதீஸ் எண்ணுடன் கருத்தையும் கூறியிருந்தால் நீங்கள் கேட்ட செய்தியை குறிப்பிட்டிருப்போம். ஹதீஸ் சாப்ட்வேர்களில் எண் வித்தியாசம் உள்ளது.

      Nasaayi-Tamil-.
      Nasaayi-TamilMisc-869.
      Nasaayi-Shamila-879.
      Nasaayi-Alamiah-869.
      Nasaayi-JawamiulKalim-869.

      இது போன்று அனைத்து ஹதீஸ்நூல்களிலும் இருக்கும். ஆலமிய்யா எண்ணையே நீங்கள் கேட்டுள்ளீர்கள்.
      நீங்கள் கேட்ட செய்தி நஸாயீ-889.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.