பாடம்:
பருவமடைந்த பெண், முக்காடு இல்லாமல் தொழும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.
377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பருவமடைந்த பெண், முக்காடு இல்லாமல் தொழும் தொழுகை ஏற்றுக்கொள்ளப்படாது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளன.
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் ‘ஹஸன்’ எனும் தரத்தில் அமைந்ததாகும். மார்க்க அறிஞர்களிடம் இதன் அடிப்படையில் உள்ள நடைமுறை: ஒரு பெண் பருவம் அடைந்து, தொழும்போது அவளது தலைமுடியில் ஏதேனும் சிறிது வெளிப்பட்டிருந்தாலும் அவளது தொழுகை செல்லாது. மேலும் இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தாகும்.
மேலும் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்: பெண்ணின் உடலில் ஏதேனும் ஒரு பகுதி வெளிப்பட்டிருந்தால் அவளது தொழுகை செல்லாது.
அவளது இரு பாதங்களின் மேல்பகுதி வெளிப்பட்டிருந்தால் தொழுகை கூடும் என்றும் (சில அறிஞர்களால்) கூறப்பட்டுள்ளது என்றும் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்.
بَابٌ: مَا جَاءَ لَا تُقْبَلُ صَلَاةُ الْحَائِضِ إِلَّا بِخِمَارٍ
حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا قَبِيصَةُ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ ابْنِ سِيرِينَ، عَنْ صَفِيَّةَ بِنْتِ الحَارِثِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا تُقْبَلُ صَلَاةُ الحَائِضِ إِلَّا بِخِمَارٍ»،
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، «حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ» وَالعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ العِلْمِ: أَنَّ المَرْأَةَ إِذَا أَدْرَكَتْ فَصَلَّتْ وَشَيْءٌ مِنْ شَعْرِهَا مَكْشُوفٌ لَا تَجُوزُ صَلَاتُهَا ” وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ قَالَ: «لَا تَجُوزُ صَلَاةُ المَرْأَةِ وَشَيْءٌ مِنْ جَسَدِهَا مَكْشُوفٌ»، قَالَ الشَّافِعِيُّ: ” وَقَدْ قِيلَ: إِنْ كَانَ ظَهْرُ قَدَمَيْهَا مَكْشُوفًا فَصَلَاتُهَا جَائِزَةٌ “
Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-377.
Tirmidhi-Alamiah-.
Tirmidhi-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்